ம.தி.மு.க-வையும் சீண்டிய சர்கார்... வாயடைத்துப்போன வைகோ!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 09 Nov, 2018 01:54 pm
mdmk-and-cindy-sarkar-vaiko-shock

சர்கார் படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த வைகோவும் அந்தப்படத்தால் விரக்தியாகி இருக்கிறார். சர்காரில் வில்லனான பழ.கருப்பையாவின் கட்சி கொடியாக ம.தி.மு.க கொடி காட்டப்பட்டுள்ளது அக்கட்சியினரை கொதிப்படைய வைத்துள்ளது. 

சர்கார் படத்தில் ஜெயலலிதா இயற்பெயரை பயன்படுத்தியதற்கும், இலவசப் பொருட்களை தீயிட்டு கொளுத்தும் காட்சிகளுக்கும் எதிப்புத் தெரிவித்து அ.தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சில காட்சிகளை படத்திலிருந்து நீக்கி மறுதணிக்கை செய்யப்பட்டுள்ளது. இனி இந்தக் காட்சிகள் இருக்காது என்பதால் இந்த விவகாரம் இத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.

இதற்காக அ.தி.மு.கவினர் நடத்திய போராட்டத்தை விமர்சித்து வைகோ சர்கார் படத்திற்கு ஆதரவாக பேசினார். ஆனால், இப்போது சர்கார் படத்திற்கு எதிராக மதிமுகவினர் குமுறி வருகின்றனர். சர்கார் படத்தில் வரும் வில்லனாக முதல்வர் கதாபாத்திரத்தில் வரும் பழ. கருப்பையாவின் கட்சிக் கொடியே அவர்களது குமுறலுக்குக் காரணம். பழ.கருப்பையா கட்சியின் கொடியும், மதிமுக கொடியும் ஒரே மாதிரியாக உள்ளது. மதிமுக கொடிதான் கிடைத்ததா? மதிமுக கொடியை வில்லன் கட்சிக் கொடி போல காட்டியது நியாயமா? என கோபத்தில்ம் குமைந்து வருகிறார்கள் மதிமுகவினர். 

வைகோ தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் கட்சிக் கொடியை வில்லன் கட்சிக் கொடியாக சித்தரித்திருப்பதை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தவிர்த்திருக்க வேண்டும். உண்மையில் அந்தப் படத்தில் வரும் கட்சிக் கொடி மதிமுக கொடி போலத்தான் உள்ளது. இது ஏ.ஆர். முருகதாஸுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை’’ என உள்ளுக்குள் குமுறி வருகிறார்கள். 

ஆனால் இதனை வெளிப்படையாக காட்டிக் கொண்டால், போராடிய அ.தி.மு.க.வினரை கண்டித்த வைகோ, இப்போது அவரது கட்சிக் கொடியை காட்டியதால் எதிர்க்கிறார் என்கிற தவறான இமேஜ் ஏற்பட்டு விடும் என்பதால் கட்சியினரை அமைதி காக்கும்படி சொல்லி இருக்கிறாராம். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close