நடிகர் விஜய்யை மன்னிக்கவே முடியாது: அமைச்சர் செல்லூர் ராஜு

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 03:15 pm
minister-sellur-raju-speaks-about-sarkar-issue

விஜய் நல்ல நடிகர்தான். ஆனாலும், அவரையும்  இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸையும் மன்னிக்கவே முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, "அருமைத்தம்பி விஜய் நல்ல நடிகர். எதிலும், முத்திரை பதிக்க வேண்டும் என்று நினைத்து செயல்படுபவர். ஆனால், இலவச திட்டங்கள் குறித்து மக்களுக்கு எதிராகப் பேசியது மன்னிக்கவே முடியாதது. இந்த விஷயத்தில் நடிகர் விஜய்யையும் முருகதாஸையும் மன்னிக்கவே முடியாது.

ஒருகாலத்தில் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களையெல்லாம் பாராட்டியவர் தான் விஜய். ஆனால், அவரது படத்தில் ஏன் இப்படி மாற்றிக் காட்டுகிறார்? மக்களுக்குத் தேவையான, பயன்படும் வகையிலான பொருட்கள் குறித்து இப்படியா பேசுவது? மடிக்கணினி, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்படுவதை எப்படி தவறாகச் சொல்லலாம்?

தி.மு.க ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்ட இலவச டிவியைப் பற்றி ஏன் விமர்சிக்கவில்லை?  இப்போது காட்சிகளை நீக்குகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதை வரவேற்கிறோம்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close