’நன்றிகெட்ட விஜய்...’ விடாது துரத்தும் எடப்பாடி சர்கார்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 09 Nov, 2018 03:11 pm

thanks-to-the-forgotten-vijay-chase-edappadi-sarkar

சர்கார் பட விவகாரத்தை அவ்வளவு எளிதில் விட்டுவிடும் முடிவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லை. சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டாலும் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் அதிமுக அமைச்சர்கள்.  

இது குறித்த ஆலோசனையின்போது முதல்வர் பேசியதை அதிமுக நிர்வாகிகள் பகிர்ந்து கொண்டனர். ‘இலவச நலத்திட்டங்களுக்கு எதிரான வசனங்களை சர்கார் படத்தில் வைத்திருக்கிறார்கள். மக்கள் நலனுக்காக வழங்கப்படும் இலவசங்களுக்கு ஆதரவாக நாம் இருக்கிறோம். அம்மாவின் விசுவாசிகளாவும் களத்தில் இருக்கிறோம். அதனால்தான் சர்கார் படத்துக்கு எதிராக கழகத் தொண்டர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மெர்சல் விவகாரத்தில் பா.ஜ.க-வினர் எதிர்ப்பையும் மீறி நடிகர் விஜய்க்கு நல்லது செய்து கொடுத்தோம்.

அதற்கு நன்றியோடு விஜய் இல்லை. சர்கார் விவகாரத்தில் விஜய் பாதிக்கப்பட்டாலோ படம் ஓடினாலோ ஓடாவிட்டாலோ அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. நம்முடைய வேலையைச் சரியாகச் செய்தால் போதும்' எனக் கூறியிருக்கிறார். ஆளும்கட்சியின் தொடர் நெருக்குதல் காரணமாக சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. இதற்கு நன்றி தெரிவித்துள்ள அமைச்சர் உதயகுமார், `சர்காரைப் போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். காட்சிகளை நீக்க சம்மதித்திருப்பது வரவேற்கத்தக்கது' எனப் பேசியிருக்கிறார்.

இதனிடையே  ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் மனு விசாரணை சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்றது. அப்போது, ‘தான் மக்களை அரசுக்கு எதிராக ஒன்று திரட்டும் செயலில் இறங்கவில்லை. கற்பனைத் திறனை குற்றச்செயலாகக் கருதக்கூடாது. தேசதுரோகம், மக்களை தூண்டி விடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் தன் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக’ தன் தரப்பு வாதத்தை முன் வைத்தார்.  இந்த நிலையில் வரும் 27ம் தேதி வரை முருகதாஸை கைது செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஏ.ஆர்.முருகதாஸுக்கு முன் ஜாமீன் கிடைத்திருந்தாலும், ஆளும் தரப்பு அவரை அவ்வளவு எளிதாக விடாது போல் தெரிகிறது.   

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.