இடைத்தேர்தலை சந்திப்பது தான் சரி என்றார் சசிகலா: டி.டி.வி தினகரன்

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 04:54 pm
ttv-dinakaran-met-sasikala

18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்ற முடிவு சரியானது என சசிகலா தெரிவித்ததாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். 

பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை, அவரது உறவினர் டி.டி.வி. தினகரன்  தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களுடன் இன்று நேரில் சந்தித்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்ற முடிவு சரியானது  எனவும், இடைத்தேர்தலில் தைரியமாக போட்டியிடுங்கள் எனவும் சசிகலா கூறியதாக தெரிவித்தார்.

மேலும், "சர்கார் விவகாரத்தில் ஆளும் கட்சியினரின் அணுகுமுறை தவறானது. சர்கார் படத்தை நடுநிலையுடன் எடுக்கவில்லை. மறைந்த தலைவர்களின் திட்டங்களை விமர்சிப்பது பெரிய அநாகரீகம். மக்களை முக்கிய பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பும் நோக்கில் ஆளும் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டில் சோதனை நடந்தபோதெல்லாம் போராடாத ஆளுங்கட்சியினர், சர்காருக்கு எதிராக போராடுகிறார்கள்"  என கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close