இலவச மொபைல் என்னாச்சு..? ஆப்பு வைத்த சர்கார்... கலக்கத்தில் எடப்பாடி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 09 Nov, 2018 04:17 pm
where-is-free-mobile-edappadi-fear


தமிழக அரசின் இலவச திட்டங்களை குறை கூறி மிக்சி, கிரைண்டர், மின் விசிறி உள்ளிட்ட இலவச பொருட்களை அள்ளிப் போட்டு தீ வைப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றதால் அ.தி.மு.க. அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இந்த நிலையில், ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த இலவச மொபைல்போன் திட்டத்தை எடப்பாடி தலைமையிலான அரசு மறந்து விட்டது.

 

தமிழகத்தில், 2016ல் நடந்த, சட்டசபை தேர்தலுக்கு முன், அ.தி.மு.க., சார்பில், இரு முறை தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இலவச மொபைல் போன் முதல் அறிக்கை, மே, 5ம் தேதியும், இரண்டாம் அறிக்கை, மே, 9ம் தேதியும், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கையில், அனைவரையும் கவர்ந்த அம்சமே, ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்பத்துக்கு, ஒரு இலவச மொபைல் போன் வழங்கப்படும் என்ற வாக்குறுதி தான். இது தான், இளைய தலைமுறையை, அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போட வைத்து, தி.மு.க.,வை குறைந்த ஓட்டு வித்தியாசத்தில், பல இடங்களில் தோல்வி அடையச் செய்தது.

அதனால், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இலவச மொபைல் போன் திட்டம், உடனடியாக நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜெயலலிதா மரணத்தாலும், அடுத்தடுத்து அரசியலில், அரசில் ஏற்பட்ட குழப்பங்களாலும், தேர்தல் வாக்குறுதிகளை, மக்கள் மறந்துவிட்டனர். இப்போது சர்கார் படத்தில் இலவசப்பொருட்களை கீழே வீசி எரிப்பது போல் காட்சிகள் இடம்பெற்று போராட்டத்தை தூண்டியது இந்த நிலையில் இலவசமாக அளிக்க இருந்த மொபைல் போன் குறித்தும் விவாதங்கள் தொடங்கி இருக்கின்றன. 

இலவச மொபைல் போன் வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்றால், மாநிலத்தில் பயன்பாட்டில் உள்ள, 1.94 கோடி ரேஷன் கார்டுகளுக்கு, தலா ஒன்று வீதம், 1.94 கோடி மொபைல் போன்கள் வேண்டும். ஆகையால் இந்தத் திட்டத்தை எடப்பாடி அரச்சால் செயல்படுத்த முடியாது. இந்த நிலையில் அனைவரும் மறந்து போன அந்தத் திட்டம் சர்கார் சர்ச்சையால் கவனத்திற்கு வந்துள்ளது. இதனால், எடப்பாடி கலக்கத்தில் இருக்கிறார்.  

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close