சந்திரபாபு நாயுடு எந்த புது தோசையையும் சுடவில்லை: தமிழிசை தடாலடி!

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 09:48 pm
tamilisai-tweet-about-stalin-chandrababu-naidu-meet

பா.ஜ.கவுக்கு எதிராக அணிகளை ஒன்றுதிரட்டும் பொருட்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பல்வேறு மாநில தலைவர்களை சந்தித்து வருகிறார். அந்த வரிசையில் இன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார்.  

இதுகுறித்து தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜனநாயகத்தைக் காப்பாற்றப் போகிறேன்.. பத்திரிகைசுதந்திரத்தைப் பறிப்பவர்களை எதிர்க்கிறேன்..என்று..சொல்கிறார் சந்திரபாபுநாயுடு..... அவசரநிலைப்பிரகடனப்படுத்தி... ஜனநாயகத்தைக் கொன்று...பத்திரிகைச்சுதந்திரத்தை நசுக்கிய...காங்கிரசுடன் இருந்துகொண்டு சொல்வது மிகப்பெரிய வேடிக்கை...

சந்திரபாபுநாயுடு,ஸ்டாலினைச்சந்தித்துவிட்டார்,அதற்கு முன்னால் தேவகவுடாவைச் சந்தித்துவிட்டார், ராகுலைச்சந்தித்துவிட்டார்..மிகப்பெரியகூட்டணியை அமைத்துவிட்டார் என்கின்றனர். எந்த புதுதோசையையும் சுடவில்லை,ஏற்கனவே எதிரணியாக..இருக்கும், ஒரு தோசையை..பிய்த்து..பிய்த்து.. சாப்பிடுகிறார் அவ்வளவுதான்..

4 ஆண்டுகளுக்கு மேலாக ஜனநாயக கூட்டணியில் இருந்தவர் வரவு சிலவுக்காக புது கூட்டணி தேடிவருகிறார். ஏற்கனவே பழக்கப்பட்ட 4 ஆண்டு சாப்பிட்டு விட்டு பிடிக்கவில்லை என சொல்லி புது ஓட்டல் தேடுகிறார்? ஒரு டீக்கடையில் பாக்கி வைத்துவிட்டு அடுத்த டீக்கடைக்கு போவதைப்போல்!..ஸ்டாலின் மகிழ ஒன்றுமில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close