சாத்தானான தினகரன்... குறி வைத்து குட்டும் நமது அம்மா!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 10 Nov, 2018 12:17 pm
sathan-the-dhinakaran-namadhu-amma-news-paper-mark

ஜெயலலிதா என்னும் சாமி இல்லாததால் தினகரன் என்னும் சாத்தான் ஆட்டம்போடுவதாக நமது அம்மா நாளிதழ் கடுமையாக சாடியுள்ளது. 
சர்கார் சர்ச்சை குறித்து டி.டி.வி.தினகரன், அம்மா’ இருந்தபோது இந்தப்படத்தை எடுத்திருந்தால் அவர்களை வீரர்களாகக் கருதலாம்..’ என தினகரன் கருத்துத் தெரிவித்து இருந்தார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நமது அம்மா நாழிதழில் ‘ சாமி இல்லாத குறையால் சாத்தான் போடுது ஆட்டம்...’ என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. அதில், வாஸ்தவம் தான் மிஸ்டர் திகார்... நீங்க கூட அம்மா உயிரோடு இருந்திருந்தா இப்படி ஆமமூக்கன் கட்சின்னு ஆரம்பிச்சு அம்மா உயிருருக ஊரெல்லாம் பிரச்சாரம் செய்து செயிக்க வச்ச பதினெட்டு பேரு பதவியை ‘பனால்’ ஆக்கி விட்டிருப்பீங்களா..?

அதேபோல அம்மா உயிரோடு இருந்திருந்தா பசும்பொன்னுக்கு போய் அம்மா பேனரை ஆள் வைச்சு கிழிக்கிற திமிரு உங்களுக்கு வந்திருக்குமா..? அது மட்டுமா அம்மா உயிரோடு இருந்திருந்தா அம்மாவை பாட்டி, கொள்ளுபாட்டின்னு கேலி கிண்டல் பண்ணுற துணிச்சல் உங்களுக்கு வந்திருக்குமா..? அதையெல்லாம் விடுங்க அம்மா மட்டும் உயிரோடு இருந்திருந்தா பாண்டிச்சேரியில் உள்ள பதுங்கு குழியை விட்டுத்தான் நீங்க வெளியே வந்திருப்பீங்களா..?

என்ன பண்றது எல்லாம் அந்த ஒரு சாமி இல்லாத குறைதான் உங்களைப்போல இத்தனை சாத்தான்கள் உலா வர காரணமாப்போச்சே...’ என அங்கலாய்த்திருக்கிறது அந்தக் கட்டுரை.   

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close