கூகுள் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த சர்கார் 'கோமளவல்லி'

  Newstm Desk   | Last Modified : 10 Nov, 2018 01:42 pm
komalavalli-name-is-trending-in-google-now

சர்கார் சர்ச்சைக்கு பிறகு 'கோமளவல்லி' என்ற பெயர் கூகுளில் அதிகம் தேடப்பட்டு, அந்த பெயர் ட்ரெண்டாகி உள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி விஜய் நடித்துள்ள படம் சர்கார். இந்த படம் கதை திருட்டு உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கி இறுதியில் ஒருவழியாக எந்த பிரச்னையும் இல்லாமல் ரிலீசானது.  படம் வெளியானதை அடுத்து அதில் தமிழக ஆளும்கட்சியை குற்றம்சாட்டி ஏகப்பட்ட காட்சிகள் இருந்ததால் அதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

தொடர்ந்து, சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என அவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, படத்தில் அரசின் இலவச மிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்களை நெருப்பில் வீசும் 5 நொடி காட்சி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. வரலட்சுமியின்  கதாபாத்திரத்தின் பெயரான கோமளவல்லியில் 'கோமள' என்ற பெயர் மட்டும் ம்யூட் செய்யப்பட்டுள்ளது. 

மேலும், ஜெயலலிதாவின் இயற்பெயர் என்று கூறப்படும் இப்பெயரை சர்கார் படத்தில் வில்லிக்கு வைத்தது தான் பெரிய தப்பு என்று அ.தி.மு.கவினர் கூறினர். 

இந்நிலையில், கோமளவல்லி என்ற பெயர் ஜெயலலிதாவின் இயற்பெயர் தானா? அந்த பெயரின் அர்த்தம் என்ன? என இது தொடர்பான பல கேள்விகளை கூகுளில் அதிகம் தேடப்பட்டுள்ளன. முன்னதாக சர்காரில் இடம்பெற்ற தேர்தல் விதிமுறை 49P கூகுளில் அதிகம் தேடப்பட்டு ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close