ஜெயலலிதா கோமளவள்ளியா..? ஆதாரத்தால் வீணாய்ப்போன அதிமுக போராட்டம்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 10 Nov, 2018 03:21 pm
jayalalitha-is-gomalavalli-waste-protest

சர்கார் படத்தில் வரலட்சுமியின் கதாபாத்திரத்திற்கு கோமளவல்லி என்று பெயர் சூட்டியிருந்தனர். இந்த கோமளவல்லி என்பது ஜெயலலிதாவின் இயற் பெயர் என்று சொல்லப்படுவதால் அ.தி.மு.கவினர் போர்க்கொடி தூக்கியது. இதனால், சம்பந்தப்பட்ட பெயர் உச்சரிக்கப்படும் இடத்தில் மறுதணிக்கையில் மியூட் செய்யப்பட்டது. ஆனால், டி.டி.வி.தினகரன், ஜெயலாலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஆகியோர் கோமளவள்ளி என்பது ஜெயலலிதாவின் பெயரே அல்ல என மறுத்து வருகின்றனர்.

அப்படியானால், யார் இந்த கோமளவள்ளி? 
2002 – 2003-ம் ஆண்டு இடைவெளியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மிகக் கடுமையாக எதிர்த்தார் ஜெயலலிதா. சோனியா வெளிநாட்டுக்காரி என்றும் அவரை இந்திய பிரதமராக்க கூடாது என்றும் பேசி வந்தார். சோனியாவை அவரது இயற்பெயரான ஆன்டனியோ மொய்னோ என்றே அப்போது கூறி வந்தார். இதற்கு பதிலடி கொடுக்க  நினைத்த அப்போதைய காங்கிரஸ் கமிட்டி தலைவரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஜெயலலிதாவை அவரது இயற்பெயர் என்று கூறி கோமளவல்லி அம்மு என்று குறிப்பிட்டு பேசினார். இதனை தொடர்ந்தே ஜெயலலிதாவின் இயற் பெயர் கோமளவள்ளி என்று பிரபலமானது. ஆனால், கடைசி வரை ஜெயலலிதா தனது இயற்பெயர் கோமளவள்ளி இல்லை என்று எங்கும் மறுக்கவில்லை. அதனால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சொன்னது உண்மை என நம்பி விட்டனர். இளங்கோவனின் தாயாரான  சுலோச்சனா சம்பத் ஜெயலலிதாவிற்கு மிகவும் நெருங்கிய தோழி. இளமைக் காலம் தொட்டே சுலோச்சனாவும் – ஜெயலலிதாவும் நெருக்கமான தோழிகள்.

அந்த வகையில் சுலோச்சனா சம்பத் தான் ஜெயலலிதாவின் இயற்பெயரை தனது மகனான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனிடம் கூறியிருக்கலாம் என நம்பப்பட்டது. ஆனால் ஜெயலலிதாவின் உண்மையான பெயர் ஜெயலலிதா மட்டுமே. கோமளவள்ளி என்பது அவரது பாட்டியின் பெயர். 
ஜெயலலிதாவின் தந்தை மருத்துவர் ஜெயராம். தாய் வேதவள்ளி. படத்தில் சந்தியா என்கிற பெயரில் நடித்தார். வேதவள்ளியின் தந்தை ரங்கசாமி ஐயங்கார். மைசூரில் இருந்து ஸ்ரீரங்கத்திற்கு குடிபெயர்ந்தவர்.

இவருக்கு ஒரு மகன், அம்புஜவள்ளி, வேதவள்ளி, பத்மவள்ளி என மூன்று மகள்கள். இவர்களது தாய் கோமளவள்ளி. மைசூர் அரண்மனையில் அவர்களது குடும்பம் இருந்தபோது மஹாராஜாவாக இருந்த ஜெயசமராஜேந்திராவும், ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமும் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்திருக்கின்றனர். ஜெயலலிதாவுக்கு பெயர் வைத்தவர் மைசூர் மன்னர் ஜெயராஜேந்திரா. நட்பின் அடிப்படையில் தனது பெயரின் முதல் பாதியையும், ஜெயலலிதாவின் தந்தை ஜெயராம் பெயரின் முதல் பாதியையும்  நினைவில் வைத்து ஜெயலலிதா எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

 

அதற்கு ஆதாரமாக ஜெயலலிதா குடும்பத்தினருக்கு இரண்டு வீடுகளை அப்போது கொடுத்த மைசூர் மன்னர் ஒரு வீட்டிற்கு ’ஜெய விலாஸ்’ என்றும் மற்றொரு வீட்டிற்கு ‘லலிதா விலாஸ்’ என்றும் அப்போதே பெயர் வைத்திருக்கிறார். ஆக, கோமளவள்ளி என்பது ஜெயலலிதா பெயரல்ல.. அவரது பாட்டியின் பெயர். இன்னொரு ஆதரமும் இருக்கிறது ஜெயலலிதாவின் அண்ணன் பெயர் ஜெயக்குமார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close