பா.ம.க-வை பங்கம் செய்ய புதிய கட்சி... பதறும் அன்புமணி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 11 Nov, 2018 08:25 am
new-party-launches-to-bet-on-pmk

இன்று சென்னையில் இயக்குனர் கவுதமன் பத்திரிகையாளர்களை சந்தித்து புதிய அரசியல் கட்சிக்கான அறிவிப்பை வெளியிட இருக்கிறார்.

நெடுவாசல் போராட்டம், கத்திப்பாரா பாலத்துக்கு பூட்டு, ஜல்லிக்கட்டுப் போராட்டம் என தொடர்ந்து போராட்ட களத்தில் நிற்பவர் கவுதமன். சில காலம், டாக்டர்.ராமதாஸுடன் நெருக்கமான நட்பில் இருந்தார். அப்போதுதான் சந்தனக்காடு சீரியலை இயக்கும் வாய்ப்பை ராமதாஸ் அவருக்கு கொடுத்தார். அதன் பிறகு அதிகம் பாமக பக்கம் போகவில்லை. காடுவெட்டி குரு இறந்த சமயத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தப் போனார் கவுதமன்.

துக்க வீட்டுக்கு வந்த பலரும் கவுதமனுடன் செஃல்பி எடுத்திருக்கிறார்கள். இதைப் பார்த்துக் கடுப்பான அன்புமணி ராமதாஸ், ‘அஞ்சலி செலுத்திட்டு உடனே நீங்க கிளம்புங்க. இறுதி ஊர்வலம் வரை வர வேண்டாம்’ என சொல்லியதாக அப்போது தகவல் பரவியது. பாமகவை உடைக்கப் போகிறார் கவுதமன் என்றும் பேசினார்கள். ஆனால், அப்போது பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தார் கவுதமன். அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த கவுதமன், திடீரென புதிய கட்சி என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் புதிய கட்சிக்கான அறிவிப்பை மட்டுமே வெளியிடுவாராம். மற்றபடி கட்சியின் பெயரோ கொடியோ எதுவும் நாளை அறிவிக்கப் போவது இல்லை. கங்கைகொண்ட சோழபுரத்தில் விரைவில் மாநாடு ஒன்றினை நடத்தி கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவிப்பதுதான் கவுதமன் திட்டமாம். அந்த அறிமுக மாநாட்டில், சில ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சில மருத்துவர்கள் என அறிவுசார்ந்த பிரமுகர்களை மேடையில் உட்கார வைத்து தனது பலத்தைக் காட்ட திட்டமிட்டு இருக்கிறாராம்.

அதுமட்டுமல்லாமல், பாமகவில் இருந்தும் அன்புமணி எதிர்ப்பாளர்களை தன் பக்கம் இழுத்து வரவும் திட்டமிட்டு இருக்கிறாராம் கவுதமன்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close