கருணாநிதியை கேவலப்படுத்திய சர்கார்... தி.மு.க-வுக்கு சூடு வராதது ஏன்..? வெளியான புஷ்வானப் பின்னணி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 11 Nov, 2018 06:34 pm

sarkar-why-does-dmk-do-not-get-hot

சர்கார் படத்தில் உண்மையில் ஜெயலலிதாவை சீண்டியதைவிட, கருணாநிதிதான் அதிகமாக அவமதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், வாய்திறக்காமல் அமைதி காத்து வருகிறது தி.மு.க. 

சர்கார் திரைப்படம் அதிமுகவுக்கு எதிராகத் திட்டமிட்டு எடுக்கப்பட்டது என்று அ.தி.மு.க அமைச்சர்கள் பிரச்சினையைக் கிளப்ப, தியேட்டர்களை முற்றுகையிட்டு சர்கார் பேனர்களைக் கிழித்து... படம் மறு தணிக்கைக்கு சென்று கோமளவள்ளி, வள்ளியாகி, 5 விநாடி காட்சிகள் நீக்கப்பட்டது. இது அ.தி.மு.கவின் சாதனையாகிப்போனது. ஆனால் சர்கார் படத்தால் உண்மையில் வேதனைப்பட வேண்டிய தி.மு.க வாய் மூடிக்கிடக்கிறது. 
படத்தை எதிர்த்து திமுகவினர் அல்லவா போராட வேண்டும்? காரணம், சர்கார் படத்தில் இலவச மிக்சியைத் தூக்கி எறிவது போன்ற காட்சியும், கோமளவல்லி என்ற பெயரும்தான் அதிமுகவினரை உறுத்தியிருக்கிறது. ஆனால், இதைத் தவிர படத்தில் அநேக இடங்களில் திமுகதான் டார்கெட் செய்யப்பட்டுள்ளது.

சர்காரில்  வில்லன் முதல்வராக வரும் மாசிலாமணி, அதாவது பழ.கருப்பையா தனது வசனங்கள் மூலம் அப்படியே கருணாநிதியை  பிரதிபலிக்கிறார். ‘நான் அரை டவுசர் போட்ட காலத்துலயே இந்திய எதிர்த்துப் போராடினவன்’ என்று பேசும் அவர், ‘56 வருஷமா அரசியல்ல இருக்கேன்’ என்கிறார். இதெல்லாம் கருணாநிதியை நினைவுபடுத்துபவை. இதை ஏன் திமுகவினர் எதிர்க்கவில்லை? பழ.கருப்பையாவுக்கு, அளவுக்கு அதிகமாக மாத்திரை கொடுத்து சாகடிக்கும் அவரது மகள் கோமளவல்லி, 'இனி எல்லா ஊடகங்களும் உங்க பேரைத்தான் சொல்லணும். நீங்க டவுசர் போட்ட நாள் முதலான உங்கள் வரலாற்றை எல்லா டிவி சானல்களும் திரும்ப திரும்ப காட்டிக்கிட்டே இருக்கணும். இந்தியாவில் உள்ள பிரதமரில் இருந்து அத்தனை மாநில முதல்வர்களும் இங்கே வரணும்' என்று சொல்வதும், கருணாநிதியின் மறைவை கிண்டலடிப்பவை.  இதை ஏன் திமுகவினர் எதிர்க்கவில்லை?

'ஒருவர் இறந்த உடன் தியாகி ஆகிவிடுவாரா?' என்று இளைஞர் கூட்டம் பழ.கருப்பையாவின் மரணத்தை விமர்சனம் செய்கிறது. பழ.கருப்பையாவின் சமாதிக்கு, கருணாநிதியின் சமாதி போன்ற அச்சு அசலான அமைப்பு. அங்கே வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் பெரிய புகைப்படம் போல, சமாதியில் பழ.கருப்பையாவின் புகைப்படம், மலர் அலங்காரம் அப்படியே சித்திரிக்கப்பட்டிருக்கிறது. இதை ஏன் திமுகவினர் எதிர்க்கவில்லை?

இவ்வளவு வெளிப்படையாக திமுகவை எதிர்த்திருக்கும் இந்தப் படத்துக்கு எதிராக தி.மு.க-வினர் துரும்பைக்கூக்ட கிள்ளிப் போடவில்லை.  அ.தி.மு.க அமைச்சர் பெருமக்களுக்கு கோபம் வர இன்னொரு காரணம், இலவச மிக்சி, கிரைண்டர், இலவச டிவியைத் தீயில் எரிகிறார்களாம். திமுக ஆட்சிக் காலத்தில் கொடுத்த இலவச கலர் டிவியையும் சேர்த்தே அந்தக் காட்சியில் தூக்கிக்கொண்டு வருகிறார்கள். இதை ஏன் திமுகவினர் எதிர்க்கவில்லை?

இந்த இலவச டிவி திட்டத்தின் அடிப்படையில் அவற்றுக்கு கேபிள் கனெக்‌ஷன் கொடுத்து அதிக பலன் அடைந்தது கலாநிதிமாறன்தான். ஆனால் அவரது தயாரிப்பில் வெளியாகும் படத்தில் இலவச டிவியும் தூக்கி வீசப்படும் காட்சி இருக்கிறது. இதை ஏன் திமுகவினர் எதிர்க்கவில்லை?
சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இருந்தே விஜய்யை தளபதி என்றே புரமோட் செய்தனர். இது ஸ்டாலினைக் குறிவைப்பதாக இருக்கிறது என்று சர்ச்சைகள் எழுந்தன. தமிழ்நாட்டில் ஒரே தளபதி ஸ்டாலின்தான் என்று ஸ்டாலின் முன்னிலையில் வே.மதிமாறன் பேசினார். அந்த பேச்சு அடங்கிய வீடியோ யூடியூப்பில் நீக்கப்பட்டது. அதற்குக் காரணம் சன் தரப்புதான் என்றும் பேச்சு வந்தது.

இப்படி ஆரம்பத்தில் இருந்தே கலாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே ஒரு முறுகல் நிலையை ஏற்படுத்தி வந்தது சர்கார். படம் வந்தபிறகு அது அதிகரித்திருக்க வேண்டும்.  ஆனால், சர்கார் படத்தை திமுகவினர் எதிர்த்தால், அது கலாநிதிக்கும் ஸ்டாலினுக்குமான உள் கட்சிப் போராட்டமாக பெரிதுபடுத்தப்படும். அதன் மூலம் திமுகவில் பிளவு என்பது போன்ற தோற்றம் பெரிதுபடுத்தப்படும். எனவே சர்காரை கண்டுகொள்ள வேண்டாம் என்று திமுக தலைமை முடிவெடுத்தது. 

சர்கார் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ராதாரவியும், பழ.கருப்பையாவும் இன்று வரை திமுகவில்தான் இருக்கிறார்கள். படத்தில் நடித்தது ஒருபக்கம் என்றால் அவர்கள் இருவரும் ஊடகங்களுக்குக் கொடுத்த பேட்டியில் விஜய்யை மிகவும் புகழ்ந்து தள்ளுகிறார்கள். இதுவும் திமுகவுக்கு ஏற்புடையதா என்று தெரியவில்லை. இந்தப் பாராட்டு விஜய்யின் நடிப்பைப் பற்றி மட்டுமல்லாமல் விஜய்யின் அரசியல் என்ட்ரி பற்றியதாகவும் உள்ளது. விஜய்தான் அடுத்த முதல்வர் என்கிறார்கள். இதையெல்லாம் திமுக தலைவர் ஸ்டாலின் எப்படி அனுமதிக்கிறார்?

இதையும் படிங்க: ஜெயலலிதா கோமளவள்ளியா..? ஆதாரத்தால் வீணாய்ப்போன அதிமுக போராட்டம்!

ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யத் தூண்டிய ரஜினி... வெளியான பகீர் பின்னணி!

newstm.in
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.