தில்லை நகர்  வட்டச் செயலாளர் கட்சியிலிருந்து நீக்கம்: அதிமுக அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 11 Nov, 2018 03:21 pm
aiadmk-thillai-nagar-vice-secretary-dismissed

திருச்சியை சேர்ந்த தில்லை நகர்  வட்டச் செயலாளர்  செக்கடி சலீமை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அதிமுக  கட்சி அறிவித்துள்ளது. 

இது குறித்து  அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை, குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில்  செயல்பட்டதாலும், கழகத்தின் கட்டுபாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருச்சி  மாவட்டம் தில்லைநகர் வட்ட செயலாளர் முகமதுசலீம் என்கிற செக்கடி சலீம், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட  அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன் பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close