குரூப் 2 தேர்வில் பெரியாரின் பெயர் சர்ச்சை: வருத்தம் தெரிவித்த டிஎன்பிஎஸ்சி

  Newstm Desk   | Last Modified : 12 Nov, 2018 01:35 pm
tnpsc-saying-sorry-for-periyar-name-issue-in-group-2-exam

குரூப் 2 வினாத்தாளில் பெரியாரின் பெயர் சாதியுடன் குறிப்பிடப்பட்டதற்கு டிஎன்பிஎஸ்சி வருத்தம் தெரிவித்துள்ளது. 

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 2 முதல்நிலைத் தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் இத்தேர்வை எழுதியுள்ளனர். 

இதில், 'திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார்?' என்ற ஒரு கேள்விக்கான பதிலில், ஒரு ஆப்ஷனாக பெரியாரின் பெயர் 'இ.வெ.ரா. ராமசாமி நாயக்கர்' என குறிப்பிடப்பட்டிருந்தது. சாதிக்கு எதிராக போராடிய அவரின் பெயர் சாதியுடன், அதுவும் ஒரு அரசு தேர்வுத்தாளில் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பெரியாரின் பெயர் 'ஈ.வெ.ரா' என்பதற்கு பதிலாக '.வெ.ரா' என பிழையுடன் அச்சிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், வினாத்தாளை வடிவமைத்த அதிகாரிகளை உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தயிருந்தார்.

இதையடுத்து தான் வினாத்தாளில் பெரியாரின் பெயர் சாதியுடன் குறிப்பிடப்பட்டதற்கு டிஎன்பிஎஸ்சி வருத்தம் தெரிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close