அமெரிக்க விருது: ஆளுநரிடம் வாழ்த்து பெற்ற தமிழிசை!

  Newstm Desk   | Last Modified : 12 Nov, 2018 03:43 pm
tamilisai-soundararajan-press-meet

அரசியலில் 'வளர்ந்து வரும் நட்சத்திரம்’ என்ற விருதை பெற்ற தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். 

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், 'அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்' என்ற விருது அமெரிக்க அரசால் அறிவிக்கப்பட்டது. இதற்காக தமிழிசை கடந்த வாரம் அமெரிக்கா சென்று விருதை பெற்று வந்தார். இதையடுத்து அவருக்கு பாஜக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். தனக்கு அளித்த இந்த விருதினை அனைத்து பா.ஜ.க தொண்டர்களுக்கும், தமிழர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் என்றும் கூறியிருந்தார். 

இந்த நிலையில் இன்று தமிழிசை சௌந்தரராஜன், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசினார். அமெரிக்காவில் தான் பெற்ற விருதினை காட்டி அவரிடம் வாழ்த்து பெற்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close