’டி.டி.வி.தினகரனை வெளுத்து வாங்கணும்..’ ஓ.பி.எஸ் தடாலடி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 13 Nov, 2018 11:42 am
ops-is-order-to-threaten-t-t-v-dhinakaran

அதிமுக மேடைகளில் டி.டி.வி.தினகரனை தொடர்ந்து விமர்சிக்க வேண்டும் என துணை முதலமைச்சரும்,  அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டு இருக்கிறார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கப் போன துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, ’’அதிமுகவுக்கு திமுகதான் எதிரி. வேறு யாரையும் நாங்க போட்டியாகவே நினைக்கலை. இந்த தினகரன் அவ்வப்போது எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியது சசிகலா தான்னு சொல்லிட்டு இருக்காரு. எடப்பாடி பழனிசாமியை சசிகலா முதல்வர் ஆக்க கிடையாது. எம்.எல்.ஏ.க்கள் எல்லோரும் சேர்ந்துதான் அவரை முதல்வர் ஆக்கினோம்.

இனியும் இதையே சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது. தினகரன் மாதிரி நாங்க 20 ரூபாய் நோட்டை கொடுத்து ஏமாத்தும் ஆட்கள் இல்லை. நாங்க ஓட்டுக்கு பணமும் கொடுக்க மாட்டோம். மக்களையும் ஏமாற்ற மாட்டோம்.’ என தினகரனை வெளுத்து வாங்கினார். அதேபோல தனது ஆதரவாளர்களிடமும், ‘ நீங்க யாரு எந்த கூட்டத்தில் பேசினாலும் தினகரனை விடாதீங்க... எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெளுத்து வாங்குங்க...’ என்றும் அறிவுறுத்தி இருக்கிறார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close