பதவியும் போச்சு... பணமும் போச்சு... தள்ளாட்டத்தில் டி.டி.வி.தினகரன் அணி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 13 Nov, 2018 01:12 pm
dwarf-t-t-v-dhinakaran-team

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் டி.டி.வி.தினகரன் நடத்தும் ஆலோசனைக்கூட்டங்கள் மற்றும் கட்சி விழாக்களில்கூட கலந்து கொள்ளாமல், அவற்றைத் தவிர்த்து வருகிறார்கள். விரைவில் சிலர் மாற்று முகாமுக்கு தாவக்கூடும் எனக் கூறப்படுகிறது. 

குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயன்றதால் 18 பேர் தகுதி இழந்து, தொகுதி பக்கமே போக முடியாமல் தவித்து வருகிறார்கள். டி.டி.வி.தினகரன் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் என நினைத்தவர்களின் நிலை இப்போது தலைகீழாகியுள்ளது. நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வரும்போது இந்த 18 பேருக்கும் சீட் இல்லை எனக் கூறிவிட்டார் டி.டி.வி.தினகரன்.

ஆனால், இவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் அறிவிக்கப்படும் வேட்பாளர்களுக்கு பணி செய்ய வேண்டுமாம். ’முகம் தெரியாத நபர்களுக்கு நாம ஏன் பணி செய்யணும்... நம்ம தொகுதியில நமக்கு சீட் கொடுத்தால் நாம செய்யலாம்... ஆறு தொகுதி உள்ள ஒரு எம்பி தொகுதிக்கு தேர்தல் செலவு செய்தால் நடுத்தெருவுக்கு வந்து பிச்சை எடுக்க வேண்டியதுதான்... அதனால நம்ம தொகுதியில மட்டும் தேர்தல் வேலை பார்த்துட்டு போகலாம்’’ என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.  இதில் பலர் சட்டமன்ற தேர்தல் வரை தாக்கு பிடிக்க முடியுமா? என்பது குறித்தும் யோசித்து வருகிறார்களாம்.

காரணம், பணத்தட்டுப்பாட்டால் விழிபிதுங்கி வருகிறார்களாம். இதனால், தினகரன் நடத்தும் ஆலோசனைக்கூட்டம், கட்சி விழாக்களில்கூட கலந்து கொள்ளாமல் தவிர்த்து வருகிறார்கள். விரைவில் சிலர் மாற்று முகாமுக்கு தாவக்கூடும் என்கிறார்கள். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close