தடுப்பணைத் திட்டத்தை ஆந்திர அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

  Newstm Desk   | Last Modified : 13 Nov, 2018 02:36 pm
ramadoss-tweet

பாலாறு மற்றும் துணை ஆறுகளில் தடுப்பணைகளை கட்டும் திட்டத்தினை ஆந்திர அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாலாறு மற்றும் துணை ஆறுகளில் 21 தடுப்பணைகளை கட்ட ரூ.43 கோடி நிதியை ஆந்திர அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.  ஆற்று நீர் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தத்தை மீறிய ஆந்திர அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. தடுப்பணைத் திட்டத்தை ஆந்திர அரசு கைவிட வேண்டும்.

இதைத் தடுக்க எதுவும் செய்யாமல் பினாமி அரசு உறங்கும். எல்லாம் முடிந்த பின் எழுந்து பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதி விட்டு மீண்டும் உறங்கும்!" என்று குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close