இப்படியொரு சோதனையா..? கூட்டணியால் உச்சக்கட்ட குழப்பத்தில் மு.க.ஸ்டாலின்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 13 Nov, 2018 05:50 pm
m-k-stalin-who-suffers-from-coalition-parties

பெரம்பூர் இடைத்தேர்தலில் கடந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணிக் கட்சித் தலைவரான, என்.ஆர்.தனபாலன் போட்டியிட்டார். தற்போதும் தனக்கே சீட் வேண்டும் என ஸ்டாலினிடம் மன்றாடி வருகிறார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட,18 எம்.எல்.ஏ.,க்களில், தினகரன் ஆதரவாளர், வெற்றிவேல் தொகுதியான பெரம்பூரில், மீண்டும் போட்டியிடுகிறார்.  அ.தி.மு.க., தரப்பில் முன்னாள், எம்.எல்.ஏ.,வும், அமைப்பு செயலருமான, ஜே.சி.டி. பிரபாகரனை நிறுத்த முடிவு செய்திருக்கிறார்கள். 
 கடந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணிக் கட்சித் தலைவரான, என்.ஆர்.தனபாலன் போட்டியிட்டு, ஐநூறுக்கும் குறைவான ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுப்போனார்.

இந்த முறை, அவருக்கு சீட் கிடைப்பது கடினம் எனத் தகவல் உள்ளது. இருபது தொகுதிகளிலும் தி.மு.க கட்சியினரையே களமிறக்கி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறார் ஸ்டாலின் . ஆனால் மீண்டும் தனக்கே சீட் வேண்டும் என ஸ்டாலினிடம் நச்சரித்து வருகிறார். “கடந்த முறை இங்கே போட்டியிட்ட எனக்கே மீண்டும் வாய்ப்புத் தரவேண்டும். நெடுங்காலமாக தி.மு.க.வுடன் இருக்கிறோம். நான் தனி சின்னத்தில் போட்டியிடவில்லை.

உதயசூரியன் சின்னத்தில்தான்  போட்டியிடப்போகிறேன். நான் வெற்றி பெற்றால், தி.மு.க. எம்.எல்.ஏ.வாகவே தொடர்வேன், ஸ்டாலின் முதல்வராக என்னுடைய எல்லா பங்களிப்பையும் தருவேன்’’ என வெளிப்படையாக பேச ஆரம்பித்து இருக்கிறார். இதனால் மு.க.ஸ்டாலின் உச்சக்கட்ட குழப்பத்தில் இருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close