பா.ம.கவின் புதுக்கணக்கு... ஸ்டாலினை சுற்றி வளைக்கும் ராமதாஸ்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 13 Nov, 2018 06:07 pm
ramadoss-bends-around-stalin

மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதில் போட்டியிடும் பாமக அந்தத் தொகுதியில் திமுக போட்டியிடக்கூடாது என்றும் மற்ற தொகுதிகளில் தி.மு.கவை எதிர்த்து நிற்கமாட்டோம் என்றும் ஸ்டாலினிடம்  கோரிக்கை வைத்திருக்கிறார்களாம்.

திமுக கூட்டணியில் பாமக இணைவது பற்றி பாமகவில் சிலருக்கு அபிப்ராயம் இருக்கிறது. ஏற்கனவே உயர் மட்ட குழுவில் பொருளாளர் துரைமுருகனே இது பற்றி பேசி இருக்கிறார். ஆனால் அப்போது வட மாவட்ட திமுக பிரமுர்கள் பாமக சேர்வதை எதிர்த்தார்கள். இந்த நிலையில் இப்போது பாமக புது கணக்கு ஒன்றை தயாரித்து அதை காங்கிரஸ் மூலமாக செயல்படுத்த முடிவு செய்திருக்கிறதாம்.

அதாவது மக்களவை தேர்தலில் திமுக அணியுடன் ஒரு தொகுதி உடன்பாடு கொள்வது என்றும், அதன்படி திமுக போட்டியிடும் இடங்களில் பாமக போட்டியிடாது, பாமக போட்டியிடும் இடங்களில் திமுக போட்டியிடக் கூடாது என்றும் ஒரு புது ஃபார்முலா பாமக தரப்பில் முன் வைக்கப்பட்டுள்ளதாம். இதற்கு திமுக என்ன பதில் சொல்லப் போகிறது என்பதுதான் பாமகவின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close