தகரும் முதல்வர் கனவு... டி.டி.வி.தினகரனை டம்மியாக்கிய சசிகலா!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 14 Nov, 2018 12:10 pm
chief-minister-s-dream-sasikala-to-avoid-t-t-v-dhinakaran

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா அங்கிருந்தே அரசியல் நகர்வுகளை தனது ஸ்லீப்பர் செல்கள் மூலம் கண்காணித்து வருகிறார்.

அவருக்கு டி.டி.வி.தினகரன் மீது கூட சசிகலாவுக்கு பெரிய அளவு நம்பிக்கை இல்லை என்கிறார்கள் ’’நான் வெளியே வந்ததும் மற்ற விஷயங்களை பார்த்துக் கொள்கிறேன். அதுவரை கூட்டம் கலையாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் டி.டி.வி.தினகரனை நிர்வகிக்கச் சொல்லி இருக்கிறேன். அப்புறம் நாடாளுமன்ற தேர்தலில் நான் சொல்லும் நபர்களைதான் நிற்க வைக்க வேண்டும். உன் ஆட்களுக்கு என்று சிலருக்குதான் சீட் கிடைக்கும்.

இல்லாவிட்டால் நம்மிடம் இருப்பவர்கள் சிதறி விடும் ஆபத்து இருக்கு’’ என தினகரனுக்கு சொல்லி அனுப்பி இருக்கிறார் சசிகலா. மக்களவை தேர்தலில் அ.ம.மு.க சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே தயாராகி விட்டதாம். அதில் பாதிப்பேர் கோடீஸ்வரர்கள். இந்தப்பட்டியலில் உள்ள நான்கைந்து பேர் சசிகலாவின் தீவிர விசுவாசிகள். இதன் மூலம் தண்டனை முடிந்து திரும்பியதும் தினகரனை ஓரம் கட்டிவிட்டு கட்சியை சசிகலாவை நிர்வகிக்க உள்ளார். இதனால், தினகரனின் முதல்வர் கனவு தகர்ந்து போயுள்ளது. 

இது ஒருபுறமிருக்க, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சிலருடன் சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்தனர். தகுதிநீக்க வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டுமா, வேண்டாமா என்பது உட்படத் தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களின பொருளாதாரச் சந்தேகங்களைத் தீர்த்துவைப்பதே சந்திப்பின் நோக்கம். அதுவும் சசிகலாவே நேரடியாகச் சொன்னால், தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்கள் கட்டுப்படுவார்கள் என்பது தினகரனின் நம்பிக்கை. அதன்படி, சிறைவாசிகளைச் சந்திக்கும் பொதுவான இடத்தில் சசிகலாவைச் சந்தித்தார் தினகரன். அப்போது. தினகரனுடன் சென்றிருந்தவர்களிடம் அவர்களின் குடும்பங்களைப் பற்றி அக்கறையாக விசாரித்துள்ளார் சசிகலா.

கஷ்டப்படுகிறவர்களுக்கு தேவையான பண உதவிகளை உடனடியாக செய்து கொடுக்கச் சொல்லி இருக்கிறார். தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மாற்று அணிக்கு சென்று விடக்கூடாது என்பதும் இதன் நோக்கம். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close