திமுகவுக்கு வந்த சோதனை... மு.க.ஸ்டாலினை தெறிக்க விடும் காங்கிரஸ்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 14 Nov, 2018 02:04 pm
congress-for-m-k-stalin-is-tension

20 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுகவிடம் கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் 5 தொகுதிகளை கேட்பதால் மு.க.ஸ்டாலின் குழப்பத்தில் இருக்கிறார். 

காலியாக உள்ள, 20 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், ஜனவரி மாதமோ அல்லது மக்களவை தேர்தலோடோ சேர்ந்து நடக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், 20 தொகுதிகளிலும் திமுகவை சேர்ந்தவர்களை மட்டுமே வேட்பாளராக்கி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்கிற திட்டத்தில் இருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதற்கு கூட்டணிக்கட்சிகள் ஒத்துழைக்கும் என அவர் நம்பினார். 

ஆனால், நடப்பது வேறு. கூட்டணிக்கட்சியைச் சேர்ந்த என்.ஆர்.தனபால் பெரும்பூர் தொகுதியை தனக்கு ஒதுக்க வேண்டும் எனக்கேட்டு வருகிறார். கடந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவேலிடம் தோற்றுப்போனார். மீண்டும் தனபால் சீட் கேட்பதால் அதிர்ச்சியாகிக் கிடந்தார் மு.க.ஸ்டாலின்.

இந்த நிலையில், கூட்டணிக்கட்சியான காங்கிரஸும் 5 தொகுதிகளை ஒதுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில், சோளிங்கர் தொகுதியில், காங்கிரஸ் போட்டியிட்டு, தோற்றது. அதனால், வரும் இடைத்தேர்தலில், சோளிங்கர், நிலக்கோட்டை உட்பட, ஐந்து தொகுதிகளைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தி.மு.க.,விடம், தமிழக காங்கிரஸ் கட்சியினர் கேட்டு வருகின்றனர். ஆனால், மு.க.ஸ்டாலின் மறுத்து வருகிறார். இதனால், தேர்தல் அறிவித்ததும் டெல்லி தலைவர்கள் மூலமாக, தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள் தமிழக காங்கிரஸ் கட்சியினர்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close