கருணாநிதி மறைந்து 100வது நாள்! பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மெரினா நினைவிடம்!

  Newstm Desk   | Last Modified : 14 Nov, 2018 03:32 pm
kalaignar-karunanidhi-memorial-100th-day-remembrance

தி.மு.கவின் முன்னாள் தலைவர் கருணாநிதி மறைந்து இன்றுடன் 100 நாட்கள் ஆவதையொட்டி, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் அலங்காரம் அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியும், அவரும் தாயாருடன் அமைக்கப்பட்ட இந்த மலர் அலங்காரம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார். அவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்குவது தொடர்பாக பல பிரச்சனைகள் எழுந்த நிலையில் இறுதியில் நீதிமன்றம் சென்று, மெரினாவில் இடம் கிடைத்தது. அவர் பெரிதும் விரும்பும் முரசொலி நாளிதழ் அன்றாடம் அவரது சமாதியில் வைக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்றுடன் அவர் மறைந்து 100 நாட்கள் ஆகிறது. இதையடுத்து அவரது சமாதியில் இன்று மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அவரது தாய் அஞ்சுகத்துடன் கருணாநிதி இருப்பது போன்று பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இது மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close