திடீர் பாஜக பாசம்... தம்பித்துரை அந்தர்பல்டி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 14 Nov, 2018 02:55 pm
thambithurai-is-love-for-bjp

சசிகலாவுக்கு ஆரம்பத்தில் நெருங்கிய விசுவாசியாக இருந்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர் தம்பித்துரை. அதன் பிறகு எடப்பாடி தலைமையிலான  அ.தி.மு.கவில் இருக்கிறார். இங்கேயும் ஓவர் ஜால்ரா. இப்போது பாஜகவுக்கு பல்லவி பாட ஆரம்பித்திருக்கிறார். 

மக்களவை துணை சபாநாயகராக இருக்கும் இவர் மீது பாஜகவுக்கு சந்தேகம். இதனால், பாஜக அவரை கண்காணிக்க உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி மத்திய, மாநில உளவுத்துறைகள் கொடுத்த அறிக்கையில் இவர் சசிகலாவின்  விசுவாசி. ஏகப்பட்ட விவகாரங்களை செய்து வருகிறார். இவரை நம்பினால் பாஜகவுக்கு தேசிய அளவில் களங்கத்தை ஏற்படுத்திவிடுவார் என டெல்லிக்கு அறிக்கை போயிருக்கிறது. அப்போதிலிருந்தே டெல்லியில் உள்ள முக்கிய தலைவர்கள் யாரும் தம்பிதுரையை அருகில் நெருங்கவிடவில்லை. இதனால், அதிருப்தியான தம்பித்துரை பாஜகவை சில மாதங்களாக விமர்சித்து வந்தார். ஆனால், இப்போது அந்தர் பல்டியடித்து பாஜகவையும், பிரதமர் மோடியையும் புகழ்ந்து வருகிறார். 

“மோடியை பொறுத்தவரை உலகளவில் சிறந்த தலைவராக விளங்கி வருகிறார்.மேலும் இந்தியாவின் பெருமையையும் வலிமையையும் அவர் உயர்த்தி வருகிறார்’’ என ஓரிரு நாட்களுக்கு முன்பு புகழ்ந்து தள்ளினார். இப்போது, ‘’காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, சீதாராம் யெச்சூரி சந்தித்து பேசியுள்ளார். பா.ஜ.க. மதவாத கட்சி என்று சொல்கிற இடது சாரிகளும், தி.மு.க.வும் இணைந்துதான் அன்று பா.ஜ.க.வை காப்பாற்றினார்கள். இன்று மோடியை வீழ்த்துவோம் என்று சொல்வது அரசியல்.

தி.மு.க இந்தியாவை காப்பாற்றும் என்பது கேள்விக்குறி. தி.மு.க. இலங்கையில் 1½லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது தி.மு.க. மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தது. ஆனால் அவர்களால் இலங்கை தமிழர்களை காப்பாற்ற முடியவில்லை. இப்போது, கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து இந்தியாவை வலிமையாக்குவோம் என்று கூறுவது அரசியலுக்காக’’ என்றார் அவர். ’’அரசியலுக்கு வராத ரஜினியை குறித்து விமர்சனம் செய்வது தேவையற்றது’ என்றும் கூறியுள்ளார்.

தம்பித்துரையில் இந்த திடீர் புகழுரைகளுக்கு காரணம் பாஜக தலைவர்களுடன் மீண்டும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என தம்பித்துறை திட்டமிட்டு வருவதாகக் கூறுகிறார்கள். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close