’கேவலம்... வெட்கம்... கிரிமினல்...’ ஃபார்முக்கு வந்த மு.க.ஸ்டாலின்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 14 Nov, 2018 05:08 pm
shame-criminal-m-k-stalin-who-came-to-form

மென்மையான அரசியல் போக்கை முன்னெடுக்கிறார்  என விமர்சிக்கப்பட்டு வந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின கடுமையான சொற்களைக் கையாண்டு ஆளும்தரப்பை வசைமாறிப் பொழிய ஆரம்பித்திருக்கிறார். 

மு.க.ஸ்டாலின் பல விஷயங்களில் ஆளும் தரப்பை எதிர்த்து விமர்சனம் செய்வதில்லை என்றும் எதிர்கட்சித் தலைவராக இருந்தும் அதனை சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் குறைகள் கூறப்பட்டன. சமீபகாலமாக எதிர்கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.   
சென்னை, பல்லாவரத்தில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் அ.தி.மு.கவையும், அமைச்சர்களையும் சராமரியாக விமர்சித்தார். 

’’நாட்டில் இன்று இருக்கக்கூடிய பிரச்சனைகளை தயவு கூர்ந்து  மறந்துவிடக்கூடாது. மத்தியில் ஒரு ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்னைக்கு வந்து என்னை சந்தித்தார். பின்னர் வெளியே வந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஆட்சியைப் பற்றி சொல்லுங்கள் என்று கேட்டார்கள். ஒரே வரியிலே சொன்னார். ‘ஆட்சி என்ற ஒன்று இருக்கிறதா?, என்று. இதைவிட கேவலம், வெட்கம் இந்த ஆட்சிக்கு தேவையில்லை. காரணம் ஒரு “கிரிமினல் கேபினெட்” தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. 

 முதலமைச்சர் சி.பி.ஐ விசாரணையில் சிக்கியிருக்கிறார். துணை முதலமைச்சர் பல குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கிறார். நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறார். அதேபோல், அமைச்சர்கள் வரிசையை எடுத்துப் பார்த்தால் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், குட்கா புகழ், இப்பொழுது குட்கா புகழ் என்று சொல்லமுடியாது டெங்கு புகழ். அந்த அளவிற்கு பெரிய பட்டங்களை பெற்றிருக்கக்கூடிய அமைச்சர் அவர் வருமான வரித்துறையிடம் சிக்கியிருக்கிறார். அதற்கடுத்தது தங்கமணி, வேலுமணி இப்படி பல அமைச்சர்கள்.

ஒரு கிரிமினல் கேபினெட் அமைந்துள்ளது. இந்த ஆட்சி என்றைக்கு ஒழியும் என்று மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஆட்சி இன்றைக்கு தப்பித்து நிலைத்திருப்பதற்கு காரணம், மத்தியில் இருக்கிற ஆட்சி. ஏனென்றால், மத்தியில் இருப்பவர்கள் செய்யக்கூடிய காரியத்தை எதைப்பற்றியும் கவலைப்படப்போவதில்லை, நீட் பிரச்சனையா கவலை இல்லை, இந்தியை திணிக்கவேண்டுமா கவலையில்லை. எது வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று ஓப்பனாக விட்டிருக்கிறார்கள், அந்த நிலையில் தான் தமிழ் நாட்டில் இருக்கக்கூடிய ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது’’ என்று பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close