அறந்தாங்கி எம்.எல்.ஏவுக்கு டெங்கு காய்ச்சல்..? தொண்டர்களால் பீதி

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 14 Nov, 2018 07:00 pm
dengue-fever-for-th-mla-panic-with-volunteers

அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதிக்கு டெங்கு காய்ச்சல் என அத்தொகுதி தொண்டர்கள் கிளப்பி விட்டதால் அங்கு பரப்பு நிலவி அடங்கியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரத்தினசபாபதி. ஜெயலலிதா மறைவுக்கு பின் ஏற்பட்ட  அரசியல் மாற்றத்தில் டி.டி.வி.தினகரன் அணிக்கு மாறிய பின், அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளராக உள்ளார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க தீர்ப்பிற்கு முன் எம்.எல்.ஏக்கள் அனைவரும் குற்றாலத்தில் குழுமியிருந்தனர். அதில் ரத்தினசபாபதியும்  கலந்து கொண்டார். சில மாதங்களுக்கு முன்பு தினகரன் அணிக்கு சென்றதால் இவரது எம்.எல்.ஏ பதவி தப்பி விட்டது. அவருக்கு  சில தினங்களுக்கு முன் திடீரென உடல் நிலை சரியில்லாமல் போயிருக்கிறது. இதனால் கட்சியினர் யாரையும் சந்திப்பதை தவிர்த்து விட்டார். 

டெங்கு பிரச்னையால் மாநில முழுவதும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருந்ததாலும் காய்ச்சல் நீடித்ததால் பயந்து போன எம்.எல்.ஏ புதுக்கோட்டையில் உள்ள  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு நாளில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அதன்பின்னரும் கட்சியினரை சந்திக்காமல் இருந்தார். இதனால், ஆத்திரமடைந்த கட்சியினர் எம்.எல்.ஏ-வுக்கு டெங்கு காய்ச்சல் உள்ளது. அதற்கு சிகிச்சை பெற்று  வருவதால் கட்சியினரை சந்திக்க மறுக்கிறார் எனக் கொளுத்தி போட்டனர். இந்த தகவல் காட்டு தீ போல் பரவியதால் எம்.எல்.ஏ ஏகத்திற்கும் டென்ஷனாகி இருக்கிறார்.

 

உடனடியாக வதந்தியை தடுக்கும் விதமாக மறுநாளே கட்சியினரை வரவழைத்து அவர்களுடன் சந்திப்பை நடத்தினார்.  அப்போது ‘எனக்கு சாதாரண காய்ச்சல்  மட்டுமே உள்ளது. ரத்த மாதிரி எடுத்து பார்த்ததில் எவ்வித பிரச்னையும் இல்லை’ என கூறி சமாளித்துள்ளார். இந்த புரளியை கிளப்பிவிட்ட தொண்டர்கள் எப்படி  நமது சாமர்த்தியம் பலித்தது என அவர்களுக்குள் மகிழ்ந்திருக்கிறார்கள். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close