சுயாதீனமிழந்த சூலூர் எம்.எல்.ஏ... பணியாளர்களை பூட்டி வைத்ததால் பரபரப்பு..!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 15 Nov, 2018 11:17 am
sulur-mla-locked-up-the-staff

எம்.எல்.ஏ விடுதியில் தண்ணீர் வராததால் ஆத்திரமடைந்த சூலூர் தொகுதி பணியாளர்களை பூட்டிவைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சூலூர் தொகுதி அ.தி.மு.க எம்எல்ஏவாக இருப்பவர் கனகராஜ். அடிக்கடி பரபரப்பாகவும், சர்ச்சையாகவும் பேசி பிரபலமடைந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு விரைவில் டிடிவி தினகரன் அணி, அதிமுகவுடன் இணையும் என தெரிவித்தார். இந்த பேச்சு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் சில மாதங்களுக்கு முன் தான் டி.டி.வி.தினகரன் அணியில் இணையவுள்ளதாகக் கூறி எடப்பாடி அணியை அலற விட்டார். ஆனால், தற்போதும் எடப்பாடி அணியில்தான் இருந்து வருகிறார்.

இவர் எம்எல்ஏ விடுதியில், பி-பிளாக்கில் (3பி) தங்கியிருக்கிறார். இந்நிலையில் நேற்று தனது அறையில் இருக்கும் கழிவறைக்கு சென்றிருக்கிறார். அப்போது குழாயில் தண்ணீர் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர், சம்மந்தப்பட்ட பிரச்னையை சரிசெய்வதற்காக ஆட்களை அனுப்பும்படி கூறியிருக்கிறார்.சற்று நேரத்தில் எம்எல்ஏவின் அறைக்கு பிளம்பர், லிப்ட் மேன், மெட்ரோ வாட்டார் ஏஇ ஆகியோர் வந்துள்ளனர். அவர்களை பார்த்ததும், ‘தண்ணீர் வராமல் எப்படி உள்ளே செல்வது?’ எனக்கூறி தகராறு செய்துள்ளார். அவர்கள் பிரச்னையை சரிசெய்வதற்காக உள்ளே சென்றபோது, அவர்களை கனகராஜ் பூட்டி வைத்துவிட்டார். அப்போது எம்எல்ஏ சுயநினைவில் இல்லை என கூறப்படுகிறது.

தொடர்ந்து அங்குள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.  இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரவை செயலாளர், எம்எல்ஏவை சமாதனம் செய்து, பூட்டப்பட்டிருந்தவர்களை வெளியில் மீட்டுக்கொண்டுவந்துள்ளார். இந்த விவகாரம் எம்.எல்.ஏ விடுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close