’விஜயை பகைச்சுக்கணுமா..?’ பம்மிய அ.தி.மு.க எம்.பி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 15 Nov, 2018 11:49 am
vijay-is-here-for-the-sake-of-admk-mp-fears

சர்கார் படத்தை எதிர்த்து அ.தி.மு.க-வினர் பலரும் போராட்டத்தில் குதித்தாலும், சில நிர்வாகிகள் இந்தப்போராட்டங்களை விரும்பாமல், தங்களது ஆதரவாளர்களை கட்டுப்படுத்தி இருக்கிறார்கள். 

சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என கடந்த வாரம் தமிழகம் முழுவதும், அ.தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தினார்கள். தஞ்சாவூரிலும், ஒரு தியேட்டர் முன்பு அ.தி.மு.க.,வினர் கூடி ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். அங்கு விஜய்யின் கொடும்பாவியை எரிப்பதற்காக  காரில் எடுத்து எடுத்து வந்துள்ளனர்.

 அப்போது, போராட்டத்தில் இட்டுபட்டு இருந்த ஒரு நிர்வாகிக்கு, ராஜ்யசபா, எம்.பி., வைத்திலிங்கத்திடம் இருந்து, போன் வந்திருக்கிறது. அப்போது பேசிய, எம்.பி., 'விஜய் ரசிகர்கள் பலர், அ.தி.மு.க.விலும்,  இருக்கிறார்கள். இடைத்தேர்தல் நேரத்தில், அவங்க கோபத்துக்கு ஆளாக வேண்டாம்... கொடும்பாவி எல்லாம் வேண்டாம்... கோஷம் மட்டும் போதும்' எனச் சொல்லி இருக்கிறார்.

அதன்பிறகு நிர்வாகிகளும் கொடும்பாவியை காருக்குள்ளேயே திணித்துக் கொண்டு கிளம்பி இருக்கிறார்கள். தஞ்சாவூரில் மட்டுமல்ல பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ள தகவல்கள் தற்போது வெளிவருகின்றன. 
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close