மு.க.ஸ்டாலின் கையில் வசமாக சிக்கிய அழகிரியின் குடுமி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 15 Nov, 2018 03:19 pm
azhagiri-s-the-hands-of-m-k-stalin

தி.மு.க-வில் அதிகாரமிக்கப்பதவி கேட்டு ஸ்டாலினை அதிர வைத்த மு.க.அழகிரி இப்போது அடிப்படை உறுப்பினராக சேர்த்துக்கொண்டால் போதும் என்கிற நிலைக்கு இறங்கி வந்திருக்கிறார்.

தி.மு.கவின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த அழகிரி தென் மாவட்டங்களை தன் கண்ணசைவில் வைத்திருந்தார். அவர் கை நீட்டுபவர் தான் எம்.எல்.ஏ... எம்.பி. இப்படி எல்லாமுமாக இருந்து வந்த அழகிரி இப்போது தி.மு.கவில் ஒஇன்றுமில்லாமல் போனதுதான் பரிதாபம். கருணாநிதி மறைவிற்கு பிறகு தன்னை கட்சியில் இணைத்துக் கொள்ளும்படி மெரினா நினைவிடத்தில் கலகத்தை தொடங்கினார் அழகிரி. அடுத்து கருணாநிதியின் முப்பதாவது நாளில் ஒரு லட்சம் ஆதரவாளர்களை திரட்டி சென்னையில் ஒன்று கூடி பலத்தைக் காட்ட திட்டமிட்டார். ஆனால், வந்ததோ சில ஆயிரம் பேர்தான். 

அந்தத் திட்டமும் பப்படமாக, திண்டுக்கல்லில் கருணாநிதிக்கு போட்டி நினைவஞ்சலிக் கூட்டத்தை நடத்தினார். ஸ்டாலின் மசியவில்லை. கட்சியில் சேர்க்கச் சொல்லி தி.மு.க தொண்டர்கள் ஒரு லட்சம் பேரிடம்  கையெழுத்து வாங்கி அறிவாலயத்தில் சமர்ப்பிக்க திட்டமிட்டு இருந்தனர் அவரது ஆதரவாளர்கள். கையெழுத்து போட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டவில்லை. அடுத்து உடன்பிறப்புகள் மூலம் தூது விட்டார். கட்சியின் சீனியர்களிடம் கண்ணீர் வடித்தார். 

இப்போது வரை ஸ்டாலின் அசைந்து கொடுக்கவில்லை. அவ்வப்போது மதுரையில் தனது ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார். இப்போதெல்லாம் அவர் அழைத்தால், ‘ அண்ணே முக்கியமான வேலை இருக்குண்ணே..’ ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அழகிரியின் ஆலோசனை கூட்டத்தையும் தவிர்த்து வருகிறார்களாம் அவரது ஆதரவாளர்கள். இப்போதெல்லாம் அழகி நடத்தும் கூட்டத்திற்கு நான்கைந்து பேர் மட்டுமே வந்து போகிறார்கள்.  இதனால் நொந்து கிடக்கிறார் அழகிரி.

ஒரு காலத்தில் தென் தமிழகத்தின் முதல்வராகவே மதிக்கப்பட்ட அழகிரி இப்போது தி.மு.கவில் அடிமட்டத் தொண்டனாக சேர்த்துக் கொண்டால் போதும் என தனது சகோதரி செல்வி மூலம் தூது விட்டு வருகிறாராம். ஆனால், அதற்கும் மறுப்புத் தெரிவித்து வருகிறாராம் மு.க.ஸ்டாலின்.
அந்தோ பரிதாபத்தில் இருக்கிறார் மு.க.அழகிரி!

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close