கஜா புயல்: 7 மாவட்டங்களில் பேருந்துகள், ரயில்கள் நிறுத்தம்!

  Newstm Desk   | Last Modified : 15 Nov, 2018 05:06 pm
gaja-cyclone-update

கஜா புயல் காரணமாக கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், காரைக்கால் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று மாலை 6 மணி முதல் பேருந்துகளை இயக்க வேண்டாம் என  அரசு போக்குவரத்து கழகத்துக்கு வருவாய்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

கஜா புயல் இன்று இரவு கடலூர் -பாம்பன் இடையே கரையை கடக்கும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து, இந்த புயலானது தீவிரம் அடைந்து தற்போது கஜா புயல் தமிழகத்தை நோக்கி 21 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. தற்போது சென்னைக்கும், நாகைக்கும் 180 கி.மீட்டர் என்ற ஒரே தொலைவில் கஜா புயல் உள்ளது. 

இதையடுத்து திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இம்மாவட்ட பள்ளி, கல்லூரிகள் அனைத்திற்கும் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புயல் காரணமாக மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் ஏற்கவே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்மாவட்டங்களில் பேருந்துகளை இயக்க வேண்டாம் என அரசு போக்குவரத்து கழகத்துக்கு வருவாய்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இன்று மாலை 6 மணி முதல் எந்த பேருந்துகளும் இயங்காது என தெரிவிக்கப்படுகிறது, மேலும், இந்த மாவட்டங்களில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close