அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு: தேசிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்

  சுஜாதா   | Last Modified : 16 Nov, 2018 06:04 am
a-statue-of-late-dmk-chief-m-karunanidhi-will-be-unveiled-in-chennai-on-december-16

அண்ணா அறிவாலயத்தின் முகப்பில் கருணாநிதியின் சிலையை அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அகில இந்திய தலைவர்கள் பங்கேற்று திறந்து வைக்க இருக்கிறார்கள்.

மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதிக்கு அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சிலை வைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மீஞ்சூர் புதுப்பேட்டில் உள்ள சிற்பக்கூடத்தில் கருணாநிதியின் சிலை  8 அடி உயரத்தில் கருப்பு கண்ணாடியுடன், தொண்டர்களை பார்த்து கை அசைப்பது போல முழு உருவ வெண்கல சிலை தயாராகி வருகிறது.  இதனை சிற்பி தீனதயாளன் உருவாக்கி வருகிறார்.  

இந்நிலையில், கருணாநிதியின் சிலை அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அண்ணா அறிவாலயம் முன் பகுதியில் உள்ள பூங்காவில், அண்ணா சிலைக்கு அருகே திறக்கப்பட உள்ளது. இவ்விழாவில்  பங்கேற்கும் படி பல்வேறு பிரபலங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு வருகிறது. அதன்படி, சோனியாகாந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிற மாநில முதலமைச்சர்கள், தேசிய கட்சி தலைவர்கள், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் இவ்விழாவில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.     

இதுகுறித்து தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அண்ணா அறிவாலயத்தின் முகப்பில் கருணாநிதியின் சிலையை அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அகில இந்திய தலைவர்கள் பங்கேற்று திறந்து வைக்க இருக்கிறார்கள். புனரமைக்கப்பட்ட அண்ணா சிலையும், கருணாநிதி சிலையும் அருகருகே அமைய உள்ளன. எழுச்சிமிகு விழாவாக இந்த நிகழ்வு கொண்டாடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close