உலுக்கப்போகும் ’கஜானா'ப்புயல்... ஒவ்வொரு சுவருக்கும் ரூ.10 ஆயிரம்... எடப்பாடி அதிரடி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 16 Nov, 2018 11:43 am
kajana-storm-rs-10-thousand-for-every-wall-in-tamil-nadu-edppadi-strategy

இடைத்தேர்தல் நடைபெற உள்ள 20 தொகுதிகளிலும் உள்ள சுவர்களை புக் செய்து விளம்பரம் செய்ய தலா ஒரு சுவருக்கு ரூ.10 கொடுக்க அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். 

20 தொகுதிகளுக்கும் எந்த நேரத்திலும் இடைத் தேர்தல் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம் இடைத் தேர்தலை எதிர்கொள்ள தினகரன் அணி வேலைகளை முடுக்கி விட்டிருக்க...  சுவர் விளம்பரத்துக்கு இடங்களை புக்கிங் செய்யச் சொல்லி உத்தரவிட்டு இருக்கிறார் முதல்வர் எடப்பாடி. 'பிரச்சாரத்தின் ஆரம்பமே சுவர் விளம்பரங்கள்தான். மத்த கட்சிகள் முந்திக்கிறதுக்கு முன்னாடி நாம முந்திக்கணும். 20 தொகுதிக்கு உட்பட்ட ஊர்களில் உள்ள சுவர்களை உடனே புக் பண்ணுங்க. இதுக்கான வேலைகளை அமைச்சர்களோ, எம்.எல்.ஏ.க்களோ நேரில் சென்று செய்ய முடியாது. அதனால் அந்தந்த ஒன்றிய செயலாளர் மூலமாக வேலைகளை முடுக்கிவிடுங்க.

சுவரை புக் பண்ணி என்ன செய்யப் போறோம்னு சாதாரணமாக நினைக்க வேண்டாம். சுவரை புக் பண்ண நம்ம கட்சிக்காரங்க போகும் போதே சம்பந்தப்பட்ட அந்த வீட்டு ஓனரோடு நட்பு ஏற்படும். ஒரு சுவருக்கு 10 ஆயிரம் என உடனடியாக பணத்தையும் கொடுத்துடுங்க. யாருகிட்டயும் பேலன்ஸ் வைக்க வேண்டாம். தேர்தல் முடியும் வரை ஒரு மாசத்துக்கு பத்தாயிரம் கொடுக்கிறோம்னு சொல்ல சொல்லுங்க. இதனால அந்த வீட்டுக்காரங்களோட ஓட்டுகளை நாம அட்வான்ஸ் புக்கிங் பண்ணி வைக்கிற மாதிரிதான். இந்த சுவர் புக் பண்ற வீட்டுக்காரங்க எல்லோருடைய பேரு போன் நெம்பரும் வாங்க சொல்லிடுங்க.

அவங்களோடு ரெகுலராக நம்ம நிர்வாகிகளை பேச சொல்லுங்க. கட்சித் தலைமையில் இருந்தும் அந்த வீட்டுக்காரங்களுக்கு ரேண்டமா போன் பண்ணி செக் பண்ணுவாங்க. அதனால இதுல யாரும் அலட்சியம் காட்ட வேண்டாம். உடனே பணத்தை கொடுத்து புக்கிங் ஆரம்பிச்சுடுங்க. சுவர் விளம்பரத்துக்கான செலவுகளை அந்தந்த மாவட்டச் செயலாளர் மூலமாக கொடுக்கச் சொல்லிடுறேன்...’ என்று சொல்லி இருக்கிறார். சொன்னதோடு மட்டுமல்ல... உடனடியாக ஒன்றிய செயலாளர்களிடம் சுவர் விளம்பரத்துக்காக ஒரு குறிப்பிட்ட அளவு தொகையும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

‘இது தோராயமாகத்தான் கொடுத்திருக்கோம். எவ்வளவு சுவர் புக் பண்ணியிருக்கீங்க என லிஸ்டை கொடுத்துட்டு மீதி பணத்தை வாங்கிக்கோங்க... யாரும் தப்பான நெம்பரை கொடுக்க வேண்டாம். எல்லோரையும் செக் பண்ணுவோம்’ என எச்சரித்துவிட்டுத்தான் பணம் கொடுத்திருக்கிறார்கள் மாவட்டச் செயலாளர்கள். 

கஜா புயலைவிட இந்தத் தகவல்கள் 20 தொகுதிகளிலும் சுழன்றடித்து வருகிறது. சுவரை வைத்து சித்திரம் என்கிற பழமொழியை இப்போது சுவரை வைத்து ஆட்சி என மாற்றியமைக்க முயற்சிக்கிறார் எடப்பாடி! 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close