கஜா புயல்: தஞ்சையில் முடங்கிய தொலைபேசி சேவை!

  Newstm Desk   | Last Modified : 16 Nov, 2018 11:48 am
telephone-sercive-cuts-in-tanjavur-due-to-cyclone-gaja

கஜா புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் தஞ்சையில் தொலைபேசி சேவை முடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கஜா புயல் இன்று காலை 9.30 மணியளவில் தஞ்சாவூர் அதிராம்பட்டினம் அருகே கரையை கடந்தது. இதனால் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களில் கஜா புயல் தாக்கம் அதிகமாக உள்ளது.

முக்கியமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏராளாமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதனால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து தஞ்சையில் மொத்தமாக தொலைபேசி சேவையும் முடங்கி உள்ளது. இதனால் மக்கள் ஆம்புலன்ஸ், மற்றும் அவசர உதவிகளுக்கு கூட தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close