24 மணி நேரத்தில் 23 முறை பேட்டியளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

  Newstm Desk   | Last Modified : 16 Nov, 2018 04:39 pm
gaja-cyclone-update-minister-rp-udhayakumar-press-meet

நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை 10 மணி வரை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சென்னை கட்டுப்பாட்டு அறையில் இருந்துள்ளார். மொத்தம் நேற்று முதல் 23 முறை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். 

வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த கஜா புயல், நேற்று தமிழகத்தை நெருங்கிய நிலையில் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு சுமார் 110 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. 

கஜா புயலினால் ஏற்பட்ட கனமழையால் தமிழகத்தில் 13,000 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. ஏராளமான மரங்கள் சாய்ந்துள்ளன. மேலும், சுமார் 82 ,000 பேர் 473 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 11 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கஜா புயலுக்கு ஏற்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தமிழகத்தில் பெருமளவு உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதில், தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டதாக எதிர்க்கட்சிகள் பாராட்டி வருகின்றனர். 

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை 10 மணி வரை சென்னை கட்டுப்பாட்டு அறையில் இருந்துள்ளார். மொத்தம் நேற்று முதல் 23 முறை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். முன்னதாக அவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close