கஜா புயல்: நிவாரண நிதியாக திமுக ரூ.1 கோடி அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 19 Nov, 2018 11:27 am
cyclone-gaja-dmk-mk-stalin-announced-rs-1-crore-for-relief-fund

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களை சீரமைக்கும் பணிகளுக்காக தி.மு.க சார்பில் ரூ. 1 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படுதாக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக டெல்டா மாவட்டங்களான நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயல் புபெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இம்மாவட்டங்களில் சீரமைப்புப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நிவாரண நிதியாக தி.மு.க சார்பில் ரூ. 1 கோடி ரூபாய் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திமுக எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்குவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "கஜா புயலால் பாதிக்கப்பட்ட 8 மாவட்ட மக்களுக்கு உறுதுணையாய் இருக்க வேண்டியது நம் பொறுப்பு! அந்த அடிப்படையில் மறு சீரமைப்பு மற்றும் மறுகட்டமைப்புப் பணிகளுக்கு உதவிட, கழகத்தின் சார்பில் 1 கோடி ரூபாயும், MLA மற்றும் MPக்களின் ஒருமாத சம்பளமும் நிதியுதவியாக அளிக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close