கசக்கும் இடைத்தேர்தல்... சுழலில் சிக்கிய அதிமுக!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 19 Nov, 2018 11:29 am
admk-is-riddled-by-election

இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களை எப்போது நடத்தலாம் என ஆளுங்கட்சி நினைத்தாலும் கட்சியில் பிரச்னை, இயற்கையால் பிரச்னை  என சிக்கித்தவிக்கிறது அ.தி.மு.க. ஆகையால் இடைத்தேர்தலை தள்ளி வைக்க முயற்சிக்கிறது. 

அத்துடன் மக்கள் மனநிலையும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருவதால் என்ன செய்வது என திகைத்து வருகிறது அ.தி.மு.க கூடாரம். இப்போதைக்கு கஜா புயல் காரணமாக ஆளுங்கட்சி மீது நான்கு மாவட்ட மக்கள் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். இந்த ரிப்போர்ட்டும் ஆளுங்கட்சியின் கைக்கு போய் இருக்கிறது. இந்த நேரத்தில் இடைத்தேர்தல் நடந்தால் அது தேன் கூட்டில் கைவைப்போல் ஆகி விடும் அதனால் வழக்கம்போல மழையை காரணம் காட்டி நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்தே நடத்தலாம் என நினைக்கிறார்களாம்.

அதுதான் இப்போதைக்கு நல்லது என  முக்கிய தலைவர்களும் தலையசைத்திருக்கிறார்கள்.  அதற்குள் முடிக்க வேண்டிய பணிகளை முடித்து, நிவாரணங்களை கொடுத்து நல்ல பெயர் வாங்கிடலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், புயல் பாதித்த மாவட்டங்களில் இன்னும் பசியும் பட்டினியும் அப்படியேதான் இருக்கிறது. அதனால் ஆளுங்கட்சியின் மனக்கணக்குகள் குழப்பத்தை கூட்டி இருக்கிறது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close