கருணாநிதி வீடு துவம்சம்... விரையும் மு.க.அழகிரி.. ஸ்டாலின் பதற்றம்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 12 Dec, 2018 05:09 pm
karunanidhi-s-house-dhoti

கஜா புயலில் மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான கருணாநிதியின் வீடு சேதமடைந்ததால் அக்கட்சி தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 திருவாரூர் மாவட்டம், திருக்குவளையில் பராமரிக்கப்பட்டு வந்த முன்னாள் தமிழக முதல்வரும், மறைந்த திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி பிறந்து வளர்ந்த வீடு, கஜா புயல் ஏற்படுத்திய தாக்கத்தில் சிக்கி கடும் சேதமடைந்துள்ளது. கருணாநிதியின் மனதிற்கு மிக நெருக்கமானதாக அறியப்பட்ட அந்த இல்லம், ஆண்டு தோறும் வர்ணம் பூசப்பட்டு, முறையாக பராமரிக்கப்பட்டு வந்தது.

 அந்த இல்லம் கருணாநிதியின் தந்தையார் முத்துவேலர் பெயரில் நூலகமாகவும்இயங்கி வந்தது. இந்த நிலையில் கஜா புயல் தாக்குதலில் அந்த இல்லம் சேதமடைந்துள்ளது. இந்த தகவல் திமுகவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மரம் விழுந்து சேதமடைந்துள்ள அந்த வீட்டைப் புனரமைத்து, மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என திமுகவினர் கூறி வந்தனர். இந்நிலையில், மு.க.அழகிரி திருக்குளைக்கு விரைந்துள்ளார்

பராமரிப்பு பணிகளை அவர் தனது செலவில் செய்வதற்காக சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை மு.க.ஸ்டாலின் உள்ளூர் பிரமுகர்களை வைத்து பராமரிக்கச் சொல்லி உத்தரவிட்டு இருக்கிறாராம். ஆனால், இந்த வீட்டை பராமரிக்கும் பொறுப்பு கருணாநிதியின் மகளான செல்வியிடம் இருக்கிறது. அவரால் நிர்வாகிக்கப்பட்டே ஒரு பெண்ணே இந்த வீட்டை பராமரித்து வருகிறார். 
newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close