கஜா புயல் நிவாரணத்திற்கு ரூ.1000 கோடி உடனடி விடுவிப்பு: முதலமைச்சர் அறிவிப்பு

  சுஜாதா   | Last Modified : 20 Nov, 2018 05:24 am
chief-minister-s-announcement-immediate-release-of-rs-1-000-crore-for-gaja-cyclone-relief

கஜா புயல் நிவாரண பணிகளுக்காக உடனடியாக ரூ.1000 கோடி விடுவிக்க கோரி முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழக டெல்டா மாவட்டங்களான நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயல் கடுமையான சேதத்தினை உண்டாகியுள்ளது. லட்சக்கணக்கான தென்னை மற்றும் வாழை மரங்கள் முற்றிலும் அழிந்து விட்டன.  இம்மாவட்டங்களில் சீரமைப்புப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,  கஜா புயல் நிவாரண பணிகளுக்காக உடனடியாக ரூ.1000 கோடி விடுவிக்க, முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் பிறப்பித்த உத்தரவின் முக்கிய அம்சங்கள்:

 கஜா புயல் நிவாரண பணிகளுக்காக உடனடியாக ரூ.1000 கோடி விடுவிக்க  உத்தரவிடப்படுகிறது.

 கஜா புயலால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணமாகவும்,  கடுமையாக காயமடைந்தவர்களுக்கு ரூ..1 லட்சமும், சிறிய அளவில் காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும்.

 புயலால்  முழுமையாக குடிசைகளை இழந்தவர்களுக்கு  தகுதி வாய்ந்தோருக்கு புதிய வீடு கட்ட உதவி செய்யப்படும். அதே போல் முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணமும். குறைந்தளவு சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.4100 நிவாரணமும் வழங்கப்படவுள்ளது. 

 175 மரங்களைக் கொண்ட ஒரு ஹெக்டேர் தென்னை வயல் சேதமடைந்தவர்களுக்கு, ஹெக்டேருக்கு ரூ.1,92,500 நிவாரணம். அதே சமயம் மறு சாகுபடி பணிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.72100 நிவாரணமும் அளிக்கப்படவுள்ளது.

 சொட்டுநீர் பாசனம் செய்வோருக்கு 100% முழுமையாக மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 20% மானியமும் வழங்கப்படவுள்ளது.  

 நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு கூடுதலாக ஒரு வேஷ்டி, ஒரு சேலை மற்றும் 4 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட உள்ளது.

 பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.5000 வழங்கப்பட உள்ளது.

 பாதிக்கப்பட்டோருக்கு ஆவின் நிறுவனம் மூலமாக பால் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

 மின்சார பாதிப்புகளை சரிசெய்யும் பணிகளுக்கு மின்சார வாரியத்திற்கு உடனடியாக ரூ.200 கோடி வழங்கப்படும் 

 இதேபோல புயலால் உயிரிழந்த கால்நடைகளுக்கும் தனித்தனியாக மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுபோல விரிவான பல்வேறு நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close