கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் பழனிசாமி இன்று பார்வையிடுகிறார்

  சுஜாதா   | Last Modified : 20 Nov, 2018 05:57 am
tamilnadu-chief-minister-palanisamy-visits-delta-region-today

கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் தமிழக முதலமைச்சர் பழனிசாமி இன்று பார்வையிடவுள்ளார். சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் முதல்வர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை உள்ளிட்ட புயல் சேத பகுதிகளை பார்வையிடுகிறார்.

முன்னதாக கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட ஆறு மாவட்டங்கள் கடுமையான சேதத்தினை உண்டாகியுள்ளது. கஜா புயலினால் தாக்குப்பிடிக்க முடியாமல் ஒரு லட்சத்து எழுபதாயிரம் (1,70,000)  மரங்களும், நாற்பதாயிரம்(40,000) மின் கம்பங்களும் சாய்ந்தன. மேலும் சுமார் 350 மின்மாற்றிகளும் சேதம் அடைந்து உள்ளன. இதுதவிர 1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்து இருக்கின்றன. புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சாய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மின் கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளை மாற்றி அமைக்கும் பணியில் 12 ஆயிரத்து 500 மின்துறை பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

தற்போது பல்வேறு இடங்களில் உள்ள 493 நிவாரண முகாம்களில் 2 லட்சத்து 49 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தொற்று நோய் பரவாமல் தடுக்க 372 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் 1,014 நடமாடும் மருத்துவ முகாம்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைத்து துரிதப்படுத்த கூடுதலாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இம்மாவட்டங்களில் சீரமைப்புப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நிவாரண நிதியாக தி.மு.க சார்பில் ரூ. 1 கோடி ரூபாய் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திமுக எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்குவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close