ரூ.10000000000... மாமனார் வீட்டில் ஒதுங்கிய எடப்பாடி பகீர் ப்ளான்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 20 Nov, 2018 12:04 pm
rs1000000000-the-uncle-s-secluded-house-is-edappaadi-plan

கஜா புயல் டெல்டா மாவட்டங்களைப் புரட்டிப் போட்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அரசு சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், நிவாரணப் பணிகளில் கோட்டை விட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டுகள் மக்களின் குரலாகக் கேட்டபடி இருக்கிறது. '

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்வர் இப்போதுதான் பறந்திருக்கிறார். சேலம், நாமக்கல் பகுதிகளில் தொடர்ந்து கடந்த ஐந்து நாட்களாகவே அரசு விழா, எடப்பாடியின் மாமனார் ஊரில் கும்பாபிஷேக விழா எனப் பங்கேற்று வந்தார் எடப்பாடி பழனிசாமி. நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டிருப்பதாக சேலத்தில் இருந்தபடியே பேட்டியும் கொடுத்துக்கொண்டிருந்தார். கடந்த சனிக்கிழமை புயல் பாதித்த பகுதிகளுக்கு ஆறுதல் சொல்லப் போவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது முதல்வரின் பயணம். ஆனால் அதைத் திடீரென முதல்வர் கேன்சல் செய்துவிட்டார். இதற்கிடையில், இந்தப் பிரச்னையை எதிர்கட்சிகள் பெரிது படுத்தி விட்டன.

உளவுத் துறையில் இருக்கும் முக்கிய அதிகாரி ஒருவர் முதல்வரைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். ‘டெல்டா மாவட்டங்களில் இப்போது நிலைமை சரியாக இல்லை சார். நீங்க போனால் நிச்சயமாகப் பிரச்சினை வரும். நிவாரணம் எதுவும் மக்களுக்குப் போய் சேரலைன்னு ரொம்பவே கோபமா இருக்காங்க. பல இடங்களில் தொடர் சாலை மறியலும் நடந்துட்டு இருக்கு. நீங்க அங்கே போனால் எப்படியும் மக்கள் மறியலில் இறங்கி, உங்களை முற்றுகை இடுவாங்க. முதல்வர் அங்கே போறாருன்னு ஒட்டுமொத்த மீடியாவும் உங்களைச் சுற்றித்தான் இருக்கும். ‘முதல்வர் முற்றுகை’ என்று செய்திகள் வரும். மக்களையும் காவல் துறையால் தடுக்க முடியாது. அதனால் கொஞ்சம் மக்களோட கோபம் அடங்கும் வரை நீங்க போக வேண்டாம்...’ எனச் சொல்லியிருக்கிறார்.

அதற்கு எடப்பாடியோ, ‘நீங்க சொல்றது சரிதான். ஆனால் நான் நேரில் போய் அவங்களோடு இறங்கிப் பேசினால் சமாதானப்படுத்த முடியாதா ?’ எனக் கேட்டிருக்கிறார். உளவுத் துறை அதிகாரி அதை மறுத்திருக்கிறார். ‘ நீங்க இறங்கிப் பேசுறதைக் கேட்கும் வரை மக்கள் பொறுமையாக இருக்க மாட்டாங்க. நீங்க போற ரூட் தெரிஞ்சாலே வந்து மறிச்சிடுவாங்க. பேசிட்டு இருக்கும்போதே யாராவது கல்லை விட்டு அடிச்சா போலீஸால் என்ன செய்ய முடியும்? ஒரு கலவர சூழ்நிலை வந்து அதுக்கு தடியடி நடத்தினால் அது இன்னும் பெரிய பிரச்சினையாகிடும். அதனால், தயவு செய்து நீங்க போக வேண்டாம்’ என்று சொல்லி இருக்கிறார்.

இந்தத் தகவல்களையெல்லாம் பன்னீரிடமும் சொல்லிக் கலந்து பேசியிருக்கிறார் எடப்பாடி. அவரும் உளவுத் துறை சொன்னதை ஆமோதிக்க...  என்ன செய்வதென எடப்பாடி தடுமாறி இருக்கிறார். உளவுத் துறை சொன்னது போலவே நேற்று புயலால் பாதிக்கப்பட்ட பாதித்த பகுதிகளுக்குப் போன அமைச்சர்கள் செங்கோட்டையன் உள்ளிட்ட நான்கு பேரை ஒரத்தநாடு பகுதியில் மக்கள் சிறைப்பிடித்துவிட்டனர். அவர்களை மக்களிடமிருந்து மீட்டுக் கொண்டுவரக் காவல் துறை படாதபாடு பட்டுவிட்டது. இதெல்லாம் முதல்வர் கவனத்துக்கும் போயிருக்கிறது. இன்று புயல் பாதித்த பகுதிகளுக்குப் போவதாக முதல்வர் சொல்லியிருக்கிறார். ஆனாலும் சிக்கல்கள் தொடரும்... இந்தச் சூழ்நிலையில் அங்கே  போயே ஆக வேண்டும். இல்லையென்றால் எதிர்கட்சிகள் இந்த விஷயத்தை பயன்படுத்தக் கூடும். உங்கள் பயணத்தையும் தள்ளிப்போடக்கூடாது’ எனச் சொல்லி இருக்கிறது உளவுத்துறை.

 காரில் போனால் தர்ம சங்கடம் உருவாகலாம் என்பதால், ஹெலிக்காப்டரில் போகலாம் என முடிவாகி இருக்கிறது. அதன்படி ஓ.பி.எஸும், ஈபிஎஸும் இன்று காலை ஹெலிக்கப்டரில் கிளம்பி பார்வையிட்டு வருகிறார்கள். மக்களின் மனதை சாந்தப்படுத்த ஆயிரம் கோடி ரூபாயை புயல் நிவாரண நிதியாக உடனடியாக விடுவிப்பதாகவும் அறிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனாலும், டெல்டா பகுதி மக்களின் ஆத்திரம் இன்னும் அடங்கவில்லை. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close