ஜெயலலிதா மர்ம மரணம்... விரைவில் சசிகலாவிடம் கிடுக்குப்பிடி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 21 Nov, 2018 06:08 pm
why-jayalalithaa-does-not-treat-the-disease-soon-get-rid-of-sasikala

ஜெயலலிதாவிற்கு மற்ற நோய்களுக்கு சிகிச்சை தந்த போயஸ்கார்டன் மருத்துவர்கள் நோய் தொற்றுக்கு சிகிச்சை தரவில்லை என்கிற விவகாரம் தற்போது வெளியாகி இருக்கிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி கமி‌ஷன் விசாரணை நடத்தி வருகிறது.ஜெயலலிதா வீட்டில் இருந்தபோதும் மருத்துவமனையில் இருந்தபோதும் அவருக்கு நோய்தொற்று பாதிப்பு இருந்து இருக்கிறது. மருத்துவமனையில்  மருத்துவர்கள் ஒரு மணிநேரத்துக்கு ஒரு டெஸ்ட் எடுத்து நோய்த்தொற்றை கட்டுப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். ஆனால், போயஸ்கார்டனில் இருந்தே நோய் தொற்றால் ஜெயலலிதா பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு மற்ற நோய்களுக்கு சிகிச்சை தந்த போயஸ்கார்டன் மருத்துவர்கள் நோய் தொற்றுக்கு சிகிச்சை ஏன் தரவில்லை? யார் சொல்லி இந்த சிகிச்சையை தரவில்லை என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால், ஜெயலலிதா மர்ம மரணம் தலையை சுற்ற வைக்கிறது. 

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் சசிகலாவிடம் விசாரணை நடைபெற இருக்கிறது. சசிகலா சார்பில் ஏற்கனவே வழக்கறிஞர் மூலமாக வாக்கு மூலம் தாக்கம் செய்யப்பட்டது. மரணத்தில் சந்தேகம் எழுப்பியவர்களிடம் சசிகலா வழக்கரிஞர் குறுக்கு விசாரணை செய்தார். அடுத்த கட்டமாக சசிகலாவிடம் நேரடியாக விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது. சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருப்பதால் அவருக்கு முதலில் சிறை அதிகாரிகள் மூலம் சம்மன் அனுப்பப்படும். முதலில் சகிகலாவிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்படும் என்று கூறப்பட்டது.

இதற்கு சிறையில் போதுமான வசதிகள் இல்லை என்பதால் நீதிபதி ஜெயிலுக்கு போய் சசிகலாவை ஜெயில் அதிகாரிகள் அறைக்கு வரவழைத்து விசாரணை நடத்தலாமா? அல்லது சசிகலாவுக்கு பரோல் அளித்து சென்னைக்கு வரவழைத்து கமி‌ஷன் முன் ஆஜர்படுத்தி விசாரணை நடத்தலாமா? என ஆலோசிக்கப்பட்டது.

இதில் நீதிபதி ஜெயிலுக்கு போய் விசாரணை நடத்துவதற்கும் சாத்தியம் இல்லை என்றும், பரோலில் வரவழைத்து விசாரணை நடத்துவதுதான் முறையாக இருக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close