ரூ.2 கோடி ஏப்பம்.... தமிழக காங்கிரஸில் தில்லுமுல்லு!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 21 Nov, 2018 06:29 pm
rs-2-crore-fraud-in-the-tamil-nadu-congress

தமிழக காங்கிரசில் நிலவி வரும் கோஷ்டி பூசல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆதரவாளர்களுக்கும், முன்னாள் தலைவரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆதரவாளர்களுக்கும் இடையே கருத்துவேறுபாடு நீடித்து வருகிறது.

திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என்று இளங்கோவன் மற்றும் அவரது ஆதரவாளர்களும் மேலும் சில தலைவர்களும் டெல்லி மேலிடத்தை வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ரூ.2 கோடியை ஏப்பம் விட்ட நிகழ்வு சத்தியமூர்த்தி பவனை சுழன்றடித்து வருகிறது. தமிழக காங்கிரஸில், உறுப்பினர் சேர்க்கை கட்டணம் மூலம், 2.36 கோடி ரூபாய் வசூல் ஆகியிருந்தது. இதில் 2 கோடி ரூபாயை சிலர் மோசடி செய்து விட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, கட்சியின் டெல்லி தலைமைக்கு, எதிர் கோஷ்டியினர் புகார் கொடுத்திருக்கிறார்கள். கடுப்பான டெல்லி மேலிடம், மாநில தலைமைக்கு, மாதம்தோறும் கொடுத்து வந்த 5 லட்ச ரூபாயை திடீரென நிறுத்தி விட்டதாம். அத்துடன் உறுப்பினர் கட்டணம் பற்றியும், விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. பணத்தை மோசடி செய்தவர்களின் பதவிகள் பறிபோவது நிச்சயம் எனக் கூறுகிறார்கள். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close