தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் விடுதலையான மூவர் தலைமறைவு..?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 22 Nov, 2018 01:10 pm
dharmapuri-bus-flames-case-mysteries

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த அ.தி.மு.க-வினர் 3 பேர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் வேலூர் சிறை அதிகாரிகளின் நடவடிக்கைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.  
 வேலூர் மத்திய சிறையைப் பொறுத்தவரை தனியார் வாகனங்கள் கேட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டுதான் கைதிகளை பார்க்கவோ, அழைத்துச் செல்லவோ வர வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. சிறை காவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் வாகனங்களை தவிர மற்ற எந்த வாகனங்களும் உள்ளே செல்ல அனுமதி கிடையாது. இந்நிலையில், சமீபத்தில் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் சிறையில் இருந்த அதிமுகவினர் 3 பேரையும், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலை செய்வதற்கான அரசாணை வந்த உடன் அவசரம், அவசரமாக அவர்களை விடுதலை செய்யும் முயற்சியில் சிறைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

குறிப்பாக 3 பேரின் விடுதலை குறித்து தகவல் வெளியே தெரியாத அளவிற்கு ரகசியமாக வைக்கப்பட்டது. அவர்களின் விடுதலை குறித்து மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு கூட தகவல் தெரிவிக்கவில்லையாம். சிறையில் இருந்து வெளிவந்த 3 பேரையும், அழைத்துச் செல்வதற்காக சிறை நிர்வாகத்தின் ஏற்பாட்டின்பேரில் தனியாக ஒரு ஆட்டோ சிறை வளாகத்திற்குள் சென்றது. நுழைவு வாயில் காவல் பணியில் இருந்த சிறைக்காவலர்கள் ஆட்டோ உள்ளே செல்வதற்கு எந்தவித தடையும் விதிக்காமல் கேட்டை திறந்து உள்ளே விட்டுள்ளனர். மேலும் அங்கிருந்த காவலர்கள் சிறைக்கு வெளியே பத்திரிகையாளர்கள் யாரும் இருக்கிறார்களா என்று உறுதி செய்துள்ளனர்.

பத்திரிகையாளர்கள் யாரும் வெளியே இல்லையென்று உறுதி செய்து சொன்ன பிறகுதான் அவர்கள் 3 பேரையும் ஆட்டோவில் அனுப்பினார்களாம். அவர்களை அழைத்து சென்றது யார்? எங்கே இறக்கி விட்டனர்? என்பது எல்லாம் மர்மமாகவே உள்ளது என்கின்றனர். விடுதலையான மூவரும் தற்போது அவர்களது வீட்டிலும் இல்லை என்கிறார்கள்.

சர்ச்சைகள் ஓய்ந்த பிறகு அவர்களது இல்லங்களுக்கு செல்ல அறிவுத்தப்பட்டிருக்கிறதாம். ஆகையால், சிறையில் இருந்து விடுதலையான பிறகும் தலைமறைவாக இருக்க வேண்டிய சூழல் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close