7 பேர் விரைவில் விடுதலை... காங்கிரஸை அதிர வைக்க பாஜக அதிரடி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 22 Nov, 2018 01:32 pm
7-people-released-soon-bjp-action

முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் 7 பேரை விடுதலை செய்ய பாஜக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அமித்ஷா தெலங்கானா தேர்தல் பிரசாரத்துக்கு வரும்போது அநேகமாக எழுவரின் விடுதலை குறித்த தகவல்கள் வெளியாகலாம் என தமிழக ஆளுநர் தரப்பில் இருந்து தகவல் வெளியே கசிந்து இருக்கிறது. மிகவும் சென்சிடிவான மாணவிகள் எரிப்பு வழக்கு குற்றவாளிகளே விடுதலை செய்யப்பட்ட பிறகும்... தமிழகத்தில் தலைவர்கள்தான் பெரிய அளவில் குரல் கொடுத்தார்களே தவிர எந்த ஒரு பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று உளவுத்துறை அறிக்கை கொடுத்து இருக்கிறதாம்.

அதன் அடிப்படையில் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை மட்டுமல்ல. பாஜகவுக்கு பெரிய பிளஸ் பாயின்ட்டாக மாறும் நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியினரை வெறுப்பு ஏற்றுவதற்காகவாவது இந்த ஏழுபேர்விடுதலை உறுதி என ஆளுங்கட்சியான அ.தி.மு.க தரப்பில் உறுதியாகச் சொல்கிறார்கள்.

அதன் படி இன்னும் சில வாரங்களில் 7 பேர் விடுதலை குறித்து உறுதியான முடிவுகள் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close