தேனியாற்றை ஆக்கிரமித்து ஹோட்டல்... ஓ.பி.எஸ்ஸை துரத்திய மக்கள்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 22 Nov, 2018 02:54 pm
the-hotel-occupies-theni-river

கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளான தேனி மாவட்டம், பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில், கஜா புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான அத்தொகுதி எம்எல்ஏ கதிர்காமு தகுதி நீக்கத்தில் இருக்கிறார். இதனால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  பெரியகுளத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்க்க போயிருக்கிறார். மக்கள் அவரை முற்றுகையிட்டு ஆவேசமாக பேசியதால் திரும்பிப் போய்விட்டார். கொடைக்கானல் மலைச்சாலையை பார்க்க போனவர், அங்கேயும் முழுமையாக பார்வையிடாமல், நாகப்பட்டினம் செல்வதற்காக பாதியில் திரும்பிட்டார்.

இந்த பிரச்னை ஒரு பக்கம் என்றால், தேனி நகரின் மையப்பகுதியில் ஒரு வாய்க்கால் காணாமல் போயிவிட்டதாக வேதனையில் மக்கள் நையாண்டி செய்து வருகிறார்கள். தேனி நகர் பகுதியில் சிறிய மழை பெய்தாலும் நகரின் மத்திய பகுதியான நேரு சிலை மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் பக்கம் மழை நீர் வழிந்தோட வழியின்றி தேங்கி நிற்கும். மழை நீரோடு, கழிவுநீரும் சங்கமித்து துர்நாற்றம் வீசும். இங்கே மழை நீர் வெளியேற ராஜவாய்க்கால் கட்டியிருந்தார்கள். காலப்போக்கில் இதை, சிலர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆசியோடு கபளீகரம் செய்து விட்டார்கள். இதனால் மழை நீர் தேங்கி நிற்கிறது.

கடந்த மாதம் மதுரை சாலையில் தேனி  இன்டர்நேசனல் பெயரை கொண்ட உணவு விடுதிக்கு திறப்பு விழா நடந்தது. இந்த ஓட்டலே ராஜவாய்க்கால் மேலேயே கட்டிக்கொள்ள நகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் பல லகரங்களை பெற்றுக்கொண்டு, அனுமதி அளித்த விஷயம் மக்களை கொந்தளிப்புக்கு ஆளாக்கியிருக்கிறது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close