தமிழகத்திற்கு ரூ.15 ஆயிரம் கோடி கிடைக்குமா..? ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 22 Nov, 2018 03:18 pm
will-rs-15-000-crore-for-tamil-nadu-a-shocking-report

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் மொத்தமாக சீர்குலைந்து விட்டன. இந்தப் பாதிப்புகளைச் சரிசெய்ய 15 ஆயிரம் கோடி ரூபாயைக் கேட்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதில், முதல்கட்டமாக 1,500 கோடி ரூபாய் ஒதுக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்.

ஆனால், இந்தத் தொகையை அப்படியே மத்திய அரசு ஒதுக்குமா? என தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடந்து வருகின்றன. மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை அணுகுவதால் இந்தத் தொகையில் கால்வாசி கூட தமிழகத்திற்கு கிடைக்கப்போவதில்லை என்கிறார்கள் சிலர். ’தமிழகத்தில் நிஷா புயல், வர்தா புயல், ஒகி புயல் என எந்தப் பேரிடர் வந்தாலும் மத்திய அரசு பாராமுகத்துடன்தான் செயல்பட்டு வந்திருக்கிறது. கடந்த ஆண்டுகளில் வறட்சியால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரி செய்வதற்காக 39 ஆயிரத்து 565 கோடி ரூபாய், வர்தா புயல் பாதிப்புகளை சரிசெய்வதற்காக 22 ஆயிரத்து 573 கோடி ரூபாய் என மொத்தமாக 62 ஆயிரத்து 138 கோடி நிதி உதவியை மத்திய அரசிடம் கோரியது தமிழக அரசு. 

ஆனால், மத்திய அரசோ வறட்சி நிவாரணத்துக்கு ஆயிரத்து 748 கோடியும் வர்தா புயலுக்கு 266 கோடி ரூபாய் என மொத்தமாக 2 ஆயிரத்து 14 கோடி ரூபாயை மட்டுமே ஒதுக்கீடு செய்தது. வர்தா புயலின் பாதிப்புகளால் காஞ்சிபுரம் மாவட்டம் உட்பட சென்னை நகரின் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதற்கே 266 கோடி ரூபாயைத்தான் பா.ஜ.க அரசு ஒதுக்கியது. தற்போது கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் மொத்தமாக சீர்குலைந்துவிட்டன. இதன் பாதிப்புகளைச் சரிசெய்ய 15 ஆயிரம் கோடி ரூபாயைக் கேட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதில், முதல்கட்டமாக 1,500 கோடி ரூபாய் ஒதுக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறார். இதற்குப் பதில் அளித்த பிரதமர், ` பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழு ஆய்வு நடத்தும்; புயல் பாதித்த பகுதிகளுக்கு மத்தியப் படைகளை அனுப்புகிறேன்' எனக் கூறியிருக்கிறார். கஜா புயலுக்கும் ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவாகவே நிதி ஒதுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது’ என்கிறார்கள்.  

`` ஒகி புயல், வர்தா புயல் ஆகியவற்றில் மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குமாறும் கோரிக்கை வைத்திருக்கிறார் முதல்வர். இந்தமுறை மத்திய அரசு தாராள மனதுடன் நிதியை வழங்கும் என எதிர்பார்க்கிறோம். அரசியல்ரீதியாக இந்தச் சந்திப்பை கவனிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கான தேவையும் இப்போது இல்லை. கடந்த காலங்களில் மத்திய அரசோடு தமிழக அரசுக்கு இணக்கமான உறவு இல்லை. தற்போது எடப்பாடி பழனிசாமியுடன் நல்ல நட்பில் இருக்கிறது பா.ஜ.க அரசு. எனவே, தமிழகத்துக்குத் தேவையான நிதி வந்து சேரும்’ என்கிறார்கள் அ.தி.மு.கவினர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close