நிவாரண நிதி கிடைக்காததால் விருதுகளை வாங்கி வந்த முதல்வர்:ராமதாஸ் விமர்சனம்!

  Newstm Desk   | Last Modified : 23 Nov, 2018 11:21 am
pmk-ramadoss-tweet-about-cm-palanisamy

டெல்லிக்கு  நிவாரண நிதி வாங்கச் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அது கிடைக்காத நிலையில், விருதுகளை வாங்கி வந்துள்ளார் என ராமதாஸ் விமர்சித்துள்ளார். 

கஜா புயல் பாதிப்புகள் குறித்து நேற்று பிரதமரை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை சமர்பித்தார். சந்திப்பிற்கு பின்னர், அவர், பிரதமரிடம் இடைக்கால நிதியாக ரூ.1,100கோடியும், நிரந்தர சீரமைப்புக்கு நிதியாக ரூ.15,000 கோடி கோரியுள்ளதாக தெரிவித்தார். 

இதே சமயத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று இந்தியா டுடே பத்திரிகை  நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் தமிழகத்திற்கு 4 விருதுகள் வழங்கப்பட்டன. இந்தியாவிலேயே சிறந்த மாநிலத்திற்கான விருது, சட்டம் ஒழுங்கு மற்றும் சுற்றுலாவுக்கான விருதுகள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டன. முதல்வர் பழனிசாமிக்கு குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இந்த விருதுகளை வழங்கினார்.

இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், "தில்லியில் ‘இந்தியா டுடே’ விழாவில் தமிழகத்திற்கு 4 விருதுகள். எடப்பாடி பழனிச்சாமி பெற்றுக் கொண்டார்: செய்தி - தில்லிக்கு புயல் நிவாரணம் வாங்கச் சென்றார்... அது கிடைக்காத நிலையில் விருது வாங்கி வந்தார். முதலமைச்சரின் திறமை வியக்கவைக்கிறது!" என முதல்வரை விமர்சனம் செய்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close