’அதிகாரம் பண்ணினால் அவ்வளவுதான்...’ எடப்பாடி அதிரடி

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 23 Nov, 2018 06:47 pm
that-s-the-power-edappadi-palanisamy-action

அதிமுகவின் அதிகாரப்பூர்வ சேனலான நியூஸ் ஜெ. கடந்த வாரம் தொடங்கப்பட்டது. ஆளும் கட்சியினரைப் பற்றி அதிக செய்திகள் வரும் என எதிர்பார்த்தால், அனைத்து செய்திகளும் ஒளிபரப்பப்படுகிறது. 

இதற்கு காரணம் கேட்டால் ’சேனல் வேற... கட்சி வேற. சேனலுக்குள்ள கட்சி ஆட்கள் யாரும் வந்து தலையிடக் கூடாது. அப்படி யாராவது சேனலுக்குள்ள வந்து அதிகாரம் பண்ணினாங்கன்னா உடனே எனக்கு தகவல் சொல்லுங்க. அவங்க மேல உடனே நடவடிக்கை எடுக்கப்படும். கட்சி தொடர்பாக எந்த செய்தியாக இருந்தாலும் எங்ககிட்ட உறுதிப்படுத்தாமல் சேனலில் ஒளிபரப்ப வேண்டாம்’ என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லி இருக்கிறாராம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான் அடக்கி வாசிக்கிறார்களாம். தற்போது 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.  அரசு கேபிள் அவர்களது வசம் உள்ளதால், பரவலாக அனைத்து இடங்களுக்கும் சென்று விட்டது.

ஆரம்பத்தில் நடுநிலைமையான செய்திகளை வழங்கி மக்களிடம் நெருங்கிய பின் தங்களது தரப்பு செய்திகளை அதிகமாக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம்.  மக்களவை தேர்தலும் நெருங்கி வருகிறது. இந்த தேர்தல்களில் அதிமுக அரசுக்கு பலம் சேர்க்கும் வகையில் இந்த நியூஸ் ஜெ... இருக்குமா? அல்லது ஜெயா டிவியை மிஞ்சி தன் பலத்தையும், திறனையும் நியூஸ் ஜெ டிவி காட்டுமா? இன்னும் சில மாதங்களில் தெரிந்து விடும்.

இத்தோடு பொழுதுபோக்கு சேனலும், இசை சேனலும் பொங்கல் முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதற்காக இப்போதே திரைப்படங்களின் ஒளிபரப்பு உரிமைகளையும் வாங்க திட்டமிட்டு வருகின்றனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close