’உனக்கெல்லாம் ரசிகர்களா..?’ வறுத்தெடுத்த நெட்டிசனுக்கு உதயநிதி பதிலடி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 24 Nov, 2018 11:55 am
udhayanidhi-retaliates-to-the-sacked-nettisan

உனக்கெல்லாம் ரசிகர்கள் இருக்கிறார்களா? எனக் கேட்டவருக்கு மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி பெருந்தன்மையோடு ‘அவர்கள் ரசிகர்கள் இல்லை. எனது நண்பர்கள்’ என பதிலளித்துள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய உதயநிதி ரசிகர் மன்றத் தோழர்களுக்கு அவர் நன்றி தெரிவித்ததாகக் கூறி இருகூர் உதயாபூபதி என்பவர் பதிவில் ‘’கஜா புயலால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு கோவை, ஈரோடு ,திருப்பூர் ,கரூர்,மதுரை , நீலகிரி உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது, மன்ற தோழர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்’ எனக் கூறப்பட்டிருந்தது. அந்தப்பதிவை ரீட்விட் செய்து உதயநிதிக்கு ‘’யோவ் உனக்கெல்லாம் ரசிகர்கள் இருக்காங்களா?’’ என மின்னா என்பவர் நக்கலாக ஒருவர் பதிவிட்டுள்ளார்.

 

அதற்கு உதயநிதி ’Fans laam illa nanba.. நற்பணி செய்ய எப்பொழுதும் தயாராக இருக்கும் நண்பர்கள்!’ எனப்பதில் அளித்துள்ளார்.  
இந்தப்பதிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.  ஏற்கெனவே,சென்னை வானகரம் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று வழி நெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சாலைகளின் குறுக்கே பேனர்கள் வைக்கக் கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவை மீறி திமுக தரப்பில் வைக்கப்படிருந்த பேனரை விமர்சித்து அறப்போர் இயக்கம் என்ற அமைப்பு ட்விட்டரில் புகைப்படத்தை பகிர்ந்தது.

அதில்,‘வானகரத்துக்கு இளவரசர் வர்றாராம். எந்த ஊறு இளவரசர்? பேனர் வேண்டாம் பேனர் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே பேனர் வைத்துக் கொள்வது ஒரு கலை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  எதிர்க்கட்சி 100 பேனர் வைக்கிறார்கள் என்று ஆளும்கட்சியிடம் புகார் கொடுத்தால் அவர்கள் 1000 பேனர் வைப்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு சாதாரண பேனர் விதிமுறைகளை கூட மதிக்க தெரியாத ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை கொண்டது தான் நமது தமிழகம். மேலும், எதிர்க்கட்சி 100 பேனர் வைக்கிறார்கள் என்று ஆளும்கட்சியிடம் புகார் கொடுத்தால் அவர்கள் 1000 பேனர் வைப்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு சாதாரண பேனர் விதிமுறைகளை கூட மதிக்க தெரியாத ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை கொண்டது தான் நமது தமிழகம் என்றும் விமர்சிக்கப்பட்டிருந்தது.

இந்த பதிவிற்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் அப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் “ தவறு.. மீண்டும் நடக்காது! என பதில் கூறியிருந்தார். 
இதேபோன்று ஏற்கனவே, திமுக பொதுக்குழு உறுப்பினர் கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் திமுக மூத்த தலைவர்கள் அருகே உதயநிதியின் புகைப்படம் இட்மபெற்றதை விமர்சித்து திமுக தொண்டர், உங்களுக்கு என்ன தகுதி உள்ளது என்று கேள்வி எழுப்பியிருந்தார். அப்போதும் ,‘தவறு.. மீண்டும் நடக்காது..’ என்று உதயநிதி பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினின் தற்போதைய பதிவை திமுக தொண்டர்கள் வரவேற்றுள்ளனர். சாதரண ஒருவர் கீழ்த்தரமாக விமர்சித்த கேள்விக்கு உதயநிதி பெருந்தன்மையாக பதில் கூறி உள்ளார் என சிலர் கருத்து கூறியுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close