160 அடியில் சிலை... ஜெயலலிதா ஆசையில் அ.தி.மு.க அலட்சியம்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 24 Nov, 2018 01:11 pm
160-feet-statue-the-aiadmk-ignorance-in-jayalalitha-s-wish

அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையைப்போல மதுரையில் 160 அடியில் பெரிய தமிழ்த்தாய் சிலை அமைக்க போவதாக ஜெயலலிதா அறிவித்திருந்தது இப்போது 20 அடியாக குறைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.  

சர்தார் வல்லபாய் படேல் சிலை 597 அடியில் அமைவதற்கு முன்பே, முன்மாதிரியாக கடந்த 2013ல் முதல்வர் ஜெயலலிதா, 110வது விதியின் கீழ் மதுரையில் 160 அடிக்கு தமிழ்த்தாய் சிலை நிறுவப்படும் என அறிவித்திருந்தார். அதற்கான பணிகளும் நடந்து வந்தது. மதுரை வண்டியூர் கண்மாயில் சிலை வைத்து  சுற்றுலாத்தலமாக மாற்ற முயற்சிகள் நடந்தன. ஆனால், ஒரு ஜோசியர், ‘மீனாட்சி அம்மன், காளையார்கோவில், தமிழ்த்தாய் சிலை எல்லாம் ஒரே நேர்கோட்டில் வருவதால் இந்த சிலையை வைக்க வேண்டாம். மீறினால், அரசுக்கு ஆபத்து...’ என எச்சரித்தார்.

இந்த சென்டிமென்டால் வண்டியூர் கண்மாய் கேன்சலானது. அடுத்து வேறு இடங்களைப் பார்க்கத் தொடங்கினர். பிறகு ஜெயலலிதா இறந்ததும் அந்த திட்டத்தையே மறந்து விட்டனர். ஜெயலலிதாவையே மறந்து விட்டவர்கள் அவரது திட்டத்தையா ஞாபகம் வைத்திருக்கப்போகிறார்கள்? ஆனால், மக்கள் மறக்கவில்லை. மிகப்பெரிய சிலை திட்டத்தை மதுரைக்கு என அறிவித்து விட்டு, இப்படி கிடப்பில் போட்டு விட்டீர்களே என மக்கள் கண்டன குரல் எழுப்பத் தொடங்கி விட்டனர்.

சுதாரித்த உள்ளூர் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை உலக தமிழ் சங்க கட்டிடத்தில், செயற்கை நீரூற்றின் நடுவில், ரோமன் நாட்டு மார்பிள்ஸ் கல்லில், குறைந்த பட்ஜெடில் ஒரு 20 அடிக்கு தமிழ்த்தாய் சிலையை வைக்கச் சொல்லி அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார். ஆனால், அதிகாரிகள் தரப்போ, 160 அடி என அறிவித்து விட்டு, இப்போது 20 அடியில் நிறுவினால் சர்ச்சைகள் ஏற்படும் எனக்கூறி நழுவுகிறார்களாம்.

உயரமான சிலையை நிறுவி சாதனை படைக்க நினைத்த தமிழ்த்தாய் சிலை விவகாரம், புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதையாக முடிந்து போயிற்றே என தமிழ் ஆர்வலர்கள் கொந்தளிக்கிறார்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close