கஜா புயல் பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களுக்கும் மத்தியக்குழு செல்ல வேண்டும்: ஜி.கே.வாசன்

  Newstm Desk   | Last Modified : 25 Nov, 2018 11:51 am
gaja-cyclone-gk-vasan-requested-to-cetral-govt-team-to-visit-aal-affected-all-areas

கஜா புயலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலையை நேரில் பார்க்க அனைத்து பகுதிகளுக்கும் மத்தியக்குழு சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர் அனைத்து கிராமங்களுக்கும் சென்று அங்குள்ள மக்களின் நிலையை நேரில் பார்க்க வேண்டும். பொதுமக்களிடம் நேரடியாக பேச தேவையான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட புயல் பாதிப்பை பார்வையிட வந்த மத்திய குழுவானது சரியாக ஆய்வு செய்யாமல் முறையான அறிக்கையை சமர்ப்பிக்காததால், தமிழகத்துக்கான நிவாரண நிதி முழுமையாக கிடைக்கவில்லை.

எனவே கடந்த காலத்தை போல் இல்லாமல் புயல் பாதித்த பகுதிகளுக்கு மத்திய குழுவுடன் தமிழக அதிகாரிகள் உடன் செல்லும் போது அனைத்து பகுதிகளுக்கும் அழைத்து சென்று பார்வையிட வைக்க வேண்டும்.

சேதம் அடைந்த வீடுகள், தென்னை மரங்கள், நெற்பயிர்கள், விவசாய நிலங்கள், வாழை மரங்கள், இரால் பண்ணைகள், உப்பளங்கள், மீன்பிடி படகுகள், வலைகள் போன்றவற்றை முழுமையாக பார்வையிட்டு மக்களின் நிலையை நேரில் கண்டறிந்து அதற்கேற்ப அறிக்கை தயாரிக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து மக்களுக்கும், முழுமையான நிவாரணம் கிடைக்க வழிவகை ஏற்படும் என்பது மக்களின் எதிர் பார்ப்பாகும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close